ஏலியன்களை எதிர்கொள்ள ‘பூசாரி’-யை நியமனம் செய்துள்ள நாசா..!- பயிற்சிக்காக என விளக்கம்!
முகப்பு > செய்திகள் > உலகம்எதிர் வரும் காலங்களில் ஏலியன்களை மனிதர்கள் எதிர்கொள்வதற்கு ஏதுவாக பூசாரி ஒருவரை பணி நியமனம் செய்துள்ளது நாசா.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா நீண்ட நாட்களாகவே ஏலியன்கள், வேற்று கிரகங்களில் உயிரினங்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. ‘தி மிரர்’ வெளியிட்டுள்ள செய்தியின் அடிப்படையில் பிரிட்டிஷ் பூசாரி மற்றும் இறையியலாளர் டாக்டர் ஆண்ட்ரியூ நிச்சயம் வேற்று கிரகங்களில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் என்றே கூறுகிறார்.
இவர் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இறையியல் பேராசிரியர் ஆக இருக்கிறார். பயோ கெமிஸ்ட்ரியிலும் பட்டம் பெற்றுள்ள டாக்டர் ஆண்ட்ரியூ நாசா உடன் சில காலமாக இணைந்து பணியாற்றொ வருகிறார். தி மிரர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘நாசா ஸ்பான்ஸர் செய்த நடத்திய பூசாரிகளுக்கான சிறப்புப் பயிற்சி முகாமில் மொத்தம் 24 மத குருமார்கள் பங்கேற்றுள்ளனர். இவர்கள் மத்தியில் திடீரென வேற்று கிரகங்களில் உயிரினங்கள் குறித்தத் தகவல்கள் உண்மையானால் ஒவ்வொரு மதத்தினரும் எப்படி அதை எதிர்கொள்வார்கள் என்பது குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகின் வெவ்வெறு மதம் சார்ந்தவர்களும் வேற்று கிரக உயிரினங்கள் குறித்த உண்மை நிலவரம் வெளியானால் பல்வேறு மதத்தைச் சார்ந்தவர்களும் எவ்வாறு அதை எடுத்துக் கொள்வார்கள் என்று ஆராய நாசா இந்த மத குருமார்களுக்கான முகாமை ஏற்பாடு செய்து ஆலோசித்து உள்ளது. இதற்கான முகாம் நியூ ஜெர்சியில் உள்ள ப்ரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் நடந்தது.
நாசா சார்பில் பல ஆய்வாளர்கள் வேற்று கிரகங்களில் உயிரினங்கள் இருப்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க பல நவீன சாதனங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். பூமிக்கு அருகில் உள்ள கிரகங்களை விட பூமியை விட அப்பால் உள்ள சிறு கிரகங்களில், நட்சத்திரங்களில் உயிரினங்களுக்கான வாய்ப்புகள் இருக்கிறதா என்பது குறித்தும் நாசா தொடர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது.
இதற்கான ஆராய்ச்சி மையத்தையும் நாசா சிறப்பு நிபுணர்கள் குழு கொண்டு முயற்சித்து வருகிறது. அறிவியல் சார்ந்து மட்டுமல்லாது வருங்காலத்தில் நம்மைச் சுற்றி நிகழ உள்ள அறிவியல் மாற்றங்களுக்காகவும் மக்களை தயார் செய்யும் பணியையும் நாசா மேற்கொண்டு வருகிறது. இதற்கான முதற்கட்ட நடவடிக்கையாகத் தான் மத குருமார்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்தை நாசா நிறைவு செய்துள்ளது.

மற்ற செய்திகள்
