‘என்னங்க இப்டி செஞ்சிட்டீங்க..!'- செல்ஃபி எடுக்க வந்த ரசிகர்... ஹர்திக் பாண்டியா செய்த அதிர்ச்சி காரியம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Rahini Aathma Vendi M | Dec 26, 2021 01:37 PM

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்-ரவுண்டராக திகழ்பவர் ஹர்திக் பாண்டியா. என்ன தான் திறமையாக விளையாடினாலும் தொடர்ந்து ஏற்பட்டு வரும் காயங்கள் காரணமாக இந்திய அணியின் நிறைய போட்டிகளில் இருந்து மிஸ் ஆகிறார் ஹர்திக்.

hardik pandya getting backlash for his rude behaviour

அதே நேரத்தில் அவர் எப்போது உடல் தகுதி பெற்றாலும், அப்போது அணியில் இடம் பெற்று விடுகிறார். இது தொடர் கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில் ஒரு புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார் ஹர்திக்.

hardik pandya getting backlash for his rude behaviour

சமீபத்தில் ஒரு உணவகத்தில் இருந்து ஹர்திக், உணவருந்திவிட்டு வெளியே வந்தார். இதைப் பார்த்த பல கிரிக்கெட் ரசிகர்கள் ஹர்திக்கை சூழ்ந்து கொண்டு ஆரவாரம் செய்தனர். அதில் ஒரு ரசிகர், மிகவும் உற்சாகமாகி செல்ஃபி எடுக்க ஹர்திக்கிற்கு அருகில் சென்றார்.

அவர் ஆர்வ மிகுதியில் ஹர்திக்கின் முதுகின் மீது கை போட்டுள்ளார். இதைப் பார்த்த ஹர்திக் திடீரென சினம் கொண்டு ரசிகரின் கையை ‘சட்’ என்று தட்டி விட்டுள்ளார். இது குறித்த வீடியோ தற்போது சர்ச்சைக்கு உள்ளாகி வைரலாகி வருகிறது.

hardik pandya getting backlash for his rude behaviour

இந்த சம்பவம் குறித்து ஹர்திக்கின் ரசிகர்கள், ‘கொரோனா தொற்றை மனதில் கொண்டே ஹர்திக் அப்படி நடந்து கொண்டார்’ என்று ஆதரவுக்கு வந்தனர். ஆனால் பல நெட்டிசன்கள், ஹர்திக்கின் நடத்தையை கடுமையாக விமர்சித்தனர்.

hardik pandya getting backlash for his rude behaviour

ஹர்திக் பாண்டியா, கடைசியாக இந்தியா சார்பில் டி20 உலக கோப்பைத் தொடரில் விளையாடினார். அந்த தொடரில் ஹர்திக், உடலில் ஏற்பட்ட காயம் காரணமாக பந்து வீசவில்லை. மேலும், அவர் பேட்டிங்கிலும் அந்த அளவுக்கு சாதிக்கவில்லை. இதனால் அவருக்கு தொடர்ந்து அணியில் இடம் கொடுக்கப்படுமா என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது. ஹர்திக் பாண்டியா, பந்து வீசி பேட்டிங்கும் செய்யக்கூடிய ஆல்-ரவுண்டர் என்பதால்தான் அவருக்கு தற்போது இந்திய அணியில் முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது.

அவரால் பந்து வீச முடியாத பட்சத்தில், அணியில் இடம் கொடுப்பது கடினம் என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே தற்போது விஜய் ஹசாரே தொடரில் ஹர்திக் விளையாடவில்லை. மீண்டும் முழு உடல் தகுதி பெற்று பந்துவீச வேண்டும் என்கிற நோக்கில் விஜய் ஹசாரே தொடரில் ஹர்திக் விளையாட வில்லை.

Tags : #CRICKET #HARDIK PANDYA #HARDIK PANDYA RUDE #RUDE BEHAVIOUR #ஹர்திக் பாண்டியா #இந்திய கிரிக்கெட் அணி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Hardik pandya getting backlash for his rude behaviour | Sports News.