'குறுங்கோள் ஒண்ணு கிராஸ் பண்ண போகுது...' ஒருவேளை 'பூமிய' முட்டுற மாதிரி வந்துச்சுன்னா 'அப்படி' பண்ணிடலாம்...! - சீன ஆராய்ச்சியாளர்கள் கொடுத்த ஐடியா...!
முகப்பு > செய்திகள் > உலகம்வரும் ஜூலை 24-ஆம் தேதி குறுங்கோள் ஒன்று பூமியை கடந்து செல்லும் என நாசா தெரிவித்துள்ளது.

புதிர்கள் அடங்கிய வான்வெளியில் பல்லாயிரக்கணக்கான நட்சத்திரங்களும், சிறுக்கோள்களும் அடங்கியுள்ளன.
இந்த நிலையில் தற்போது '2008 GO20' எனப் பெயரிடப்பட்ட குறுங்கோள் ஒன்று பூமியை நோக்கி மணிக்கு 18 ஆயிரம் மைல் வேகத்தில் வருவதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த குறுங்கோள் வருகையால், நாம் பயப்படத் தேவையில்லை எனவும், பூமிக்கு அருகே இது கடந்து செல்லும் என்றாலும் அதன் தூரம் அதிகமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இப்போது பூமிக்கும் சந்திரனுக்கும் இடையேயான தூரம் 2 லட்சத்து 38 ஆயிரத்து 606 மைல்கள் எனும் போது இந்த குறுங்கோளுக்கும் பூமிக்கும் இடையேயான தூரம் 37 லட்சத்து 18 ஆயிரத்து 232 மைல்களாக இருக்கும் எனக் கூறியுள்ளனர்.
அதோடு, குறுங்கோள்கள் பூமியை மோதும் அளவுக்கு நெருங்கினாலும், அதனை திசை திருப்ப பெரிய ராக்கெட்டுகளை விடலாம் என சீன ஆராய்ச்சியாளர்கள் கூறி வருவதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
