நிலாவுக்கு பறக்கும் ‘இந்தியர்’.. நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > உலகம்நிலவுக்கு செல்லும் விண்வெளி வீரர்கள் பட்டியலில் இந்திய வம்சாவளி ஒருவரும் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, வரும் 2024ம் ஆண்டு நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டம் ஒன்றை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நிலவுக்கு செல்வதற்காக 18 விண்வெளி வீரர்கள் கொண்ட குழுவை நாசா தேர்வு செய்துள்ளது.
இந்தநிலையில் 18 விண்வெளி வீரர்கள் பட்டியலில் இந்திய வம்சாவளி சேர்ந்த ராஜா ஜான் வர்புதூர் சாரி ( Raja Jon Vurputoor Chari) என்ற வீரர் இடம் பெற்றுள்ளார். இவர் இந்தியரான சீனிவாஸ் வி சாரி, பெக்கி எக்பர்ட் தம்பதியரின் மகன் ஆவார். அமெரிக்காவில் எம்ஐடி என்று அழைக்கப்படுகிற மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் (MIT - Massachusetts Institute of Technology) பட்டமும், அமெரிக்க கடற்படை சோதனை விமானி கல்லூரியில் பயிற்சியும் பெற்றவர்.
Proud to be a small part of the huge @NASA team working to get humans to the moon to stay. We need explorers, engineers, and dreamers to get #Artemis there https://t.co/H3GaLjLe8K
— Raja Chari (@Astro_Raja) December 10, 2020
கடந்த 2017ம் ஆண்டு நாசாவில் அவர் சேர்ந்தார். இதனை அடுத்து விண்வெளி வீரர் ஆவதற்கான பயிற்சியை அவர் நிறைவு செய்துள்ளார். நிலவுக்கு மனிதர்களை அழைத்துச் செல்லும் குழுவில் தான் இடம்பெற்றுள்ளது பெருமையாக உள்ளதாக ராஜா ஜான் வர்புதூர் சாரி கூறியுள்ளார். இந்த 18 பேர் கொண்ட குழுவில் பாதி பேர் பெண்கள் என்பது கூடுதல் சிறப்பு அம்சமாகும்.