'செம கேம்மால இருக்கு'... 'நேசமணி அல்டிமேட் வீடியோ'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jun 02, 2019 04:38 PM

சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகி வரும் காண்ட்ராக்டர் நேசமணியை வைத்து தற்போது டிக் டாக் மொபைல் வீடியோ கேம் ஒன்று வைரலாகி வருகிறது.

contractor Nesamani video game trend in tik tok app

சில நாட்களுக்கு முன் பாகிஸ்தானை சேர்ந்த சிவில் என்ஜினீயர் ஒருவர் தனது ஃபேஸ்புக்கில் சுத்தியலின் படத்தை வெளியிட்டு, 'இதற்கு உங்கள் நாட்டில் என்ன பெயர்' என பதிவிட்டிருந்தார். அதற்கு துபாயில் பொறியாளராக பணிபுரியும் தமிழகத்தை சேர்ந்த விக்னேஷ் பிரபாகர், 'இதன் பெயர் சுத்தியல். இது விழுந்தால் டங், டங் என சப்தம் கேட்கும். இந்த சுத்தியல் கான்ட்ராக்டர் நேசமணியின் தலையில் விழுந்ததால் அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்' என பதிவிட்டார்.

இது தொடர்பாக பலரும் பதிவிட்டனர். சிறிது நேரத்திலேயே 'பிரே பார் நேசமணி' என்ற 'ஹேஷ்டேக்' உருவாகி உலக அளவில் பரவியது. ப்ரெண்ட்ஸ் படத்தில் வரும் இந்த காமெடி தமிழ்நாட்டை சேர்ந்த பலருக்கும் தெரிந்திருக்கும். தமிழ்நாட்டை தவிர கடந்த இரு நாட்களுக்கும் மேலாக பலரும் கூகுளில் நேசமணி யார் என்று தேட ஆரம்பித்தனர். இந்த நேசமணி ட்ரெண்டிங்கில் இருந்து வந்தது. ஓட்டல்கள் முதல் டி- சர்ட்டுகள் வரை நேசமணி பெயரில் புது ட்ரெண்ட் உண்டாகி ஹிட்டடித்தது.

இந்நிலையில், டிக் டாக் ஆப்பில் நேசமணி என்ற பெயரில் மொபைல் வீடியோ கேம் ஒன்று பிரபலமாகி வருகிறது. அதில் நேசமணி காண்ட்ராக்டர் மீது கிருஷ்ணமூர்த்தியின் சுத்தியல் விழாமல் காப்பாற்ற வேண்டும். எத்தனை சுத்தியல் அவர் மீது விழாமல் காப்பாற்றுகிறோம் என்று கடைசியில் நமக்கு காட்டுகிறது. இந்த வீடியோ கேம் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

Tags : #PRAYFORNESAMANI