கொரோனா தடுப்பூசி போட்ட கொஞ்ச நேரத்தில் சரிந்த ‘நர்ஸ்’.. மேடம் உங்களுக்கு என்ன ஆச்சு..? டிவி நேரலையில் நடந்த அதிர்ச்சி..!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா தடுப்பூசி போட்டுக்குக்கொண்ட செவிலியர் செய்தியாளர் சந்திப்பின்போது மயங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது அதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. இதில் இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் அமெரிக்காவின் டென்னிசி பகுதியைச் சேர்ந்த செவிலியர் டிஃபனி டோவர் என்பவர் ஃபைஸர் (Pfizer) நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை முதல் நபராக போட்டுக்கொண்டார். இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் தடுப்பூசி குறித்து விளக்கிக் கொண்டிருந்தார்.
நேரலையில் பேசிக்கொண்டிருந்த சில நிமிடங்களிலே திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதாக பாதியிலேயே எழுந்து சென்றார். ஆனால் சில அடிகள் எடுத்து வைப்பதற்குள் அவர் மயங்கி விழுந்தார். தடுப்பூசியால் ஏற்பட்ட வலி காரணமாக செவிலியர் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
