'60 விநாடிகளில் கொரோனா தலைதெறிச்சு ஓடிரும்!'.. பிரிட்டிஷ் ராணுவம் உருவாக்கிய கிருமிநாசினிக்கு அதிகரிக்கும் வரவேற்பு!
முகப்பு > செய்திகள் > உலகம்Corona நோய்க்கிருமிகளை மொத்தமாக ஒரு நிமிடத்துக்குள் சுத்தம் செய்யக் கூடிய கிருமி நாசினி ஒன்றை பிரிட்டன் ராணுவம் தயாரித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர இருக்கிறது.

அலுவலகம், குடியிருப்புகள் என நீடித்திருக்கும் Corona தாக்கத்தை சுமார் 99.99 சதவீதம் வரை அழிக்க கூடிய புதியவகை கிருமி நாசினியை பிரிட்டன் ராணுவம் தயாரித்து அசத்தியுள்ளது. இதற்கு Virusend கிருமிநாசினி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த கிருமிநாசினி ஆனது ஏற்கனவே பலமுறை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் உறுதி செய்யப்பட்ட இந்த கிருமிநாசினியை பிரிட்டன் ராணுவம் பயன்பாட்டுக்கு அளிப்பதாகவும் அறிவித்துள்ளது. இதன் விலை மிகக் குறைவானது தான் என்றும் வெறும் 8 பவுண்டுகள் தான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மெட்வே, கெண்ட், பிரஸ்டன், லாங்க்ஸில் உள்ள கொரோனா சோதனை தளங்களில் ஏற்கனவே இராணுவத்தினரால் இந்த கிருமிநாசினி பயன்படுத்தப்பட்டு வரும் சூழ்நிலையில், பிரிட்டன் முழுவதுமான பரிசோதனை தளங்களில் தேசிய மக்கள் சுகாதார பணியாளர்களுடன் இணைந்து பிரிட்டன் ராணுவத்திற்காக 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிருமிநாசினி பாட்டில்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்பதும் அவை தற்போது பயன்பாட்டில் இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த கிருமிநாசினியை முதல் ஊரடங்கு காலகட்டத்தில், எசெக்ஸ் பகுதியை சேர்ந்த மைக்கேல் பிரிட்சார்ட் என்பவர் உருவாக்கினார். 53 வயதான இவர் பிரிட்டன் ராணுவத்தின் கண்டுபிடிப்புகளுடன் சேர்ந்து சுற்றுச்சூழலுக்கு எந்தவிதமான தீங்கும் விளைவிக்காத வகையில் இந்த கிருமிநாசினியை ஒரு தெளிப்பான் வகை கிருமிநாசினியாக உருவாக்கி Virusend என்கிற பெயரில் அளித்துள்ளார்.
உலகின் முதன்மை நிறுவனங்கள் பலவும் இந்த கிருமிநாசினியை பரிசோதித்து இந்த கிருமி நாசினி சுமார் 60 நொடிகளில், அதாவது ஒரு நிமிடத்தில் கிருமியை சுத்தமாக அழித்து ஒழிக்கிறது என்று நிரூபணம் செய்துள்ளனர், உறுதிப் படுத்தியுள்ளனர். பயன்படுத்துவதற்கு மிகவும் எளிதானது மட்டுமல்லாமல் , அலுவலகங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்கு இந்த கிருமிநாசினி பேருதவியாக இருக்கும் என்று பிரிட்டன் ராணுவத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.

மற்ற செய்திகள்
