‘மாறுபாடு அடைந்து வேகமாக பரவும்’... ‘புதிய வகை கொரோனா வைரஸ்’... ‘மீண்டும் லாக் டவுனை நோக்கி சென்ற நகரம்’... 'கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிப்பு’...!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Dec 20, 2020 04:05 PM

இங்கிலாந்தில் மாறுபட்ட குணங்களுடன் புதிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், தலைநகர் லண்டனில் மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Alarm over new Covid-19 variant puts London in lockdown

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு, பல்வேறு நாடுகள் தடுப்பூசிகளை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இதனையடுத்து முதல் நாடாக இங்கிலாந்து ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை நேரடியாக மக்களுக்கு வழங்க தொடங்கியது. இங்கிலாந்து நாட்டை அடுத்து, பஹ்ரைன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொரோனா தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் இரட்டிப்பாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாறுபட்ட குணங்களுடன் புதிய கொரோனா வைரஸ் இருப்பதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, ‘லண்டன், கென்ட், எசெக்ஸ் மற்றும் பெட்போர்ட்ஷைர் போன்ற பகுதிகளில் நள்ளிரவு முதல் 4-ம் அடுக்கு பொது முடக்கம்  மீண்டும் அமலுக்கு வருகிறது. 

அத்தியாவசியப் பணிகளுக்காக மட்டுமே மக்கள் வெளியே வரவேண்டும். அத்தியாவசியமற்ற கடைகள், உள் அரங்க உடற்பயிற்சி கூடங்கள், பொழுதுபோக்கு கூடங்கள் அனைத்தும் மூடப்படும். இந்த தடை வரும் டிசம்பர் 30 ஆம் தேதி வரை அமலில் இருக்கும். கூடுமானவரை பொதுமக்கள் பயணங்களை தவிர்க்குமாறு பொதுமக்களை கேட்டுக் கொள்கிறேன்.

நாட்டு மக்களை பாதுகாக்கும் வகையில் இக்கட்டான நேரத்தில் ஒரு பிரதமராக கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியது எனது கடமை. புதிய வைரஸ் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் நாம் ஏற்கனவே திட்டமிட்டப்படி கிறிஸ்துமஸை கொண்டாட முடியாது என்பதை கனத்த இதயத்துடன் சொல்லிக் கொள்கிறேன். லண்டன் மக்கள் நகரத்தை விட்டு வெளியேற நினைத்தால் கைது செய்யப்படலாம்.

அதிகபட்சமாக 3 குடும்பங்கள் மட்டுமே இம்மாதம் 23 முதல் 27-ம் தேதிவரை ஒன்றுகூட முடியும்’ என்று தெரிவித்துள்ளார்.  இங்கிலாந்தின் மற்ற பகுதிகளுக்கு கிறிஸ்துமஸ் தினம் குறைக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் மாறுபட்ட குணங்களுடன் புதிய கொரோனா வைரஸ் பரவுவாக வெளியாகியுள்ள செய்தி அந்நாட்டு மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Alarm over new Covid-19 variant puts London in lockdown | Sports News.