‘கொரோனாவே இப்பதான் சரியாகிட்டு வருது’.. அதுக்குள்ள ‘புதுசா’ ஒரு நோய் தொற்றா?.. 44 பேர் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் எச்சரிக்கை..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்துகொண்டிருக்கும் நிலையில் அகமதாபாத்தில் புதிய நோய் தொற்றால் 9 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய கொரொனா வைரஸால் இதுவரை 74 லட்சத்துக்கும் அதிகமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை சுமார் 10 லட்சம் மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, அதில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
இதனால் உலக நாடுகள் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. அதில் சில தடுப்பூசிகளின் சோதனைகள் முடிவடைந்துள்ள நிலையில், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றன. கொரோனா பரவல் கொஞ்சம் கொஞ்சமாக கட்டுக்குள் வந்துகொண்டிருக்கும் சூழலில் அகமதாபாத்தில் பரவிய புதிய நோய் தொற்றால் பலரும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த நோயின் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 44 பேர் அகமதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது மூக்கை தாக்கி கண்களை பாதிக்கக்கூடியதாக இருப்பதால், பார்வை இழப்பு மற்றும் மூளையின் நரம்பு மண்டலம் செயலிழக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தாமதமான சிகிச்சை உயிருக்கு ஆபத்தாக முடியக்கூடும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மற்ற செய்திகள்
