பிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருதான ‘சயத் விருது’ வழங்கினார்! அந்நாட்டு தலைவர் முகமது பின் சயத்!
முகப்பு > செய்திகள் > உலகம்By Arunachalam | Apr 04, 2019 10:33 PM
பிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருதான ’சயத் விருது’ வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மதம் மற்றும் கொள்கை பேதம் இன்றி இஸ்லாமிய நாட்டின் நட்பு மற்றும் நல்லுறவை மோடி பேணுகிறார் என பாஜக தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகமும், இந்தியாவும் வரலாற்று ஒற்றுமை கொண்ட நாடுகள். இந்நிலையில் இந்த இரு நாடுகளின் நல்லுறவைப் பேண எனது இனிய நண்பர் இந்திய பிரதமர் மோடி உதவியுள்ளார். அவரது முயற்சியை பாராட்டி ஐக்கிய அரபு அமீரக தலைவர் மோடிக்கு சயத் பதக்கம் வழங்கினார்’ என ஐக்கிய அரபு அமீரக தலைவர் முகமது பின் சயத் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
விருது வழங்கிய முகமது இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் ஒற்றுமை மற்றும் நல்லுறவு எதிர்காலத்திலும் தொடர வேண்டுமென்றார். மேலும் இந்தியா தனது பாதுகாப்பு, வளர்ச்சி, செழுமை ஆகியவற்றை தொடர்ந்து மேம்படுத்த வேண்டும் என விருப்பம் தெரிவித்தார்.