புதிய 20 ரூபாய் நாணயம் வெளியீடு: என்னென்னலாம் இருக்கு? எப்போது புழக்கத்துக்கு வரும்?

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Mar 08, 2019 12:02 PM

புதிதாக பாலிகோன் என்று சொல்லப்படும் பல கோணங்களில் வடிவமைக்கப்பட்ட 20 ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

Central Govt Releases new Indian 20 Rupee Coin

ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் 10 ரூபாய் நாணயம் 10 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிடப்பட்டது.  1 ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய், 10 ரூபாய்களுக்கான் புதிய நாணயங்களை வெளியிட திட்டமிட்டிருக்கும் மத்திய ரிசர்வ் வங்கி முதற்கட்டமாக புதிதாக 20 ரூபாய் நாணயத்தை வெளியிட்டுள்ளது.

பொதுவாகவே ரூபாய் நோட்டுகளில் அவற்றின் உண்மைத் தன்மையை பரிசோதிக்கும் வசதி இருக்கும். பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த வசதி இந்த நாணயத்திலும் இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பார்வைத்திறனாளிகள் ரூபாய்களின் உண்மைத் தன்மையை அறிந்துணருவதற்கு இருந்த சில சிக்கல்கள் தற்போது தவிர்க்கப்பட்டு இந்த நாணயங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் பொருளாதார விவகாரத்துறைச் செயலர் சுபாஷ் சந்திர கார்க் தெரிவித்தார்.

8.54 கிராம் எடை,  27 மி.மீ. வட்டம் கொண்ட இந்த நாணயம் 12 முனைகளுடன் கூடிய பாலிகோன் எனப்படும் பலகோணங்கள் கொண்டது. இதன் முகப்பில் சிங்க முகம் கொண்ட அசோக ஸ்தூபியும் அதற்குக் கீழே சத்யமேவ ஜெயதே வாசகமும் ஒருபுறம் பாரத் என்றும் மறுபுறம் இந்தியா என ஆங்கிலத்திலும் இருக்கும் என சொல்லப்படுகிறது. மேலும் மிக விரைவில் இந்த நாணயம் புழக்கத்தில் வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Tags : #NARENDRAMODI #RUPEE