மூடு விழாவை நோக்கி செல்கிறதா? இந்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Arunachalam | Apr 04, 2019 10:28 PM

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பி.எஸ்.என்.எல், கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 7,993 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்தது. மேலும், 13 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் உள்ளது. இந்த நிலையில், தற்போது 54000 பணியாளர்களை வேலையில் இருந்து நீக்க பி.எஸ்.என்.எல் அனுமதி அளித்துள்ளது. மேலும், அதில் பணியாற்றுவோருக்கான ஓய்வு பெறும் வயதை 50 ஆக குறைக்கவும் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக 10 முக்கிய சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு பி.எஸ்.என்.எல் ஒப்புதல் வழங்கியுள்ளது. அதில், பணியாளர்கள் நீக்கத்தையும், விருப்ப ஓய்வு பெறும் வயதை 50 ஆக குறைக்கப்படுவதையும் முக்கியமானதாக கருதப்படுகிறது. பிஎஸ்என்எல் இந்த நடவடிக்கையால், அங்கு பணியாற்றும் 30 சதவீதம் பேர் வேலையை இழக்க வாய்ப்புள்ளது.
மேலும், கடந்த 12 ஆண்டுகளாக பி.எஸ்.என்.எல் ஊழியர்களுக்கு ஊதிய மாற்றம் செய்யாமல் இழுத்தடித்து வருகிறது. இதே போல், தினக்கூலி அடிப்படையில் வேலை பார்ப்பவர்களுக்கும் சம்பளம் தராமல் சமாளித்து வருகிறது. இந்நிலையில் இது பெரும் சர்ச்சை போராட்டங்களுக்குப் பிறகே தினக்கூலி ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் இந்த தொடர் நடவடிக்கைளும், சீர்திருத்த முடிவுகளும் விரைவில் மூடு விழாவுக்கு கொண்டு செல்லும் என்று கூறப்படுகிறது.
