உங்க ஸ்மார்ட் போன் 'தண்ணில' விழுந்துட்டா... மொதல்ல 'இதை' செய்யுங்க!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்

By Manjula | Jul 16, 2020 08:16 PM

நாம் அனைவரும் வாழ்நாளில் ஒருமுறையாவது தண்ணீருக்குள் மொபைலை போட்டு எடுத்து இருப்போம். உடனடியாக மொபைல் பாகங்களை கழற்றி காயவைத்து எடுத்தால் அதிர்ஷ்டவசமாக மீண்டும் மொபைல் ஆன் ஆகி நம்முடைய வயிற்றில் பால் வார்க்கும்.

How do you dry out a Mobile Phone dropped in water?

சில பிடிவாதக்கார மொபைல் மீண்டும் ஆன் ஆகாமல் நமக்கு செலவு வைப்பதும் உண்டு. அந்த நேரத்தில் நம்முடைய மனநிலை படும்பாடு.. அப்பப்பா! சொல்லில் அடக்க முடியாது. அதனால் மொபைல் தண்ணீரில் விழுந்து விட்டால் முதலில் என்ன செய்ய வேண்டும்? என்பதை நாம் இங்கே பார்க்கலாம்.

*தண்ணீரில் தவறி விழுந்த ஸ்மார்ட் போனை கையில் எடுத்து உலர்ந்த துணி கொண்டு துடைக்க வேண்டும். அதன் பிறகும் போன் ஆனில் இருந்தால் அதனை சுவிட்ச் ஆப் செய்ய வேண்டும்.

*பிறகு போனை டிஷ்யூ பேப்பரினாலோ அல்லது கையடக்க துணி கொண்டோ நன்கு சுற்றி வைக்க வேண்டும். போனுடன் தொடர்பு கொள்ளும் வகையில் ஹெட்போன், டேட்டா கேபிள் முதலிய சாதனங்கள் இருந்தால் உடனே இணைப்பை துண்டித்துவிட வேண்டும்.

*சிம் கார்டு மற்றும் மெமரி கார்டை போனில் இருந்து கழற்றி விட வேண்டும். பின்னர் போனை அரிசி நிரப்பப்பட்ட பையில் வைக்க வேண்டும். நீரில் விழுந்த போனை கூடுமானவரை காற்றுப் புகாத பாக்கெட்டுகளில் அடைத்து வைக்க வேண்டும்.

*இப்படி அடைத்து வைக்கும்போது நீரை உறிஞ்சும் வகையிலான சிலவற்றை போனுடன் சேர்த்து பாக்கெட்டுகளில் அடைப்பது கூடுதல் பயன் தரும். சமைக்காத அரிசியானது நீரை உறிஞ்சும் பொருளாக நன்கு செயல்படும்.

*காற்று புகாத பைகளில் சமைக்காத அரிசியை ஸ்மார்ட் போனுடன் சேர்த்து 24 முதல் 48 மணி நேரம் வரை வைக்க வேண்டும். போனை ஹேர் டிரையர் கொண்டு உலர்த்த கூடாது. ஹேர் டிரையரிலிருந்து வருவது மிகவும் சூடான காற்றாகும். இந்தச் சூடான காற்றை போனுக்குள் செலுத்தும்போது போனில் உள்ள பலவீனமான மின்னணு கூறுகள் அதன் செயல்பாட்டை இழந்து விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

*அதேபோல் போனை ஹாட் ஓவன் மற்றும் ரேடியேட்டர் அருகில் வைப்பதையும் தவிர்க்க வேண்டும். தூயநீர் கொண்டு போனை கழுவுவதை தவிர்க்க வேண்டும். ஸ்மார்ட் போன் ஆனது உப்பு நீரை விட தூயநீரில் விழுந்தால் அதைச் சரி செய்து விடுவது எளிது.

*எனினும் உப்பு நீரில் விழுந்த போனை தூயநீர் கொண்டு மீண்டும் கழுவுவது என்பது தவறு. ஏனெனில் உப்பு நீரில் விழுந்த போனின் பாகங்கள் ஏற்கனவே ஆக்சிஜனேற்றம் அடைந்து விடுகிறது.

*மொபைல் மீண்டும் ஆன் ஆகிவிட்டால் சரியாகி விட்டதென அப்படியே இருக்க வேண்டாம். உடனே, அருகில் இருக்கும் அதிகாரபூர்வ சேவை மையத்துக்கு மொபைலை கொண்டு செல்லுங்கள்.

Tags : #SMARTPHONE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. How do you dry out a Mobile Phone dropped in water? | Technology News.