'தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள் திறப்பது எப்போது'?... அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள் திறப்பது குறித்து செங்கோட்டையன் பதிலளித்துள்ளார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.
இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ''தமிழகத்தில் தற்போதைய நிலையில் சூழலில் பள்ளிகள் திறப்பது என்பது சாத்தியமில்லை.
பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். ஆன்லைன் வகுப்புகளை பொறுத்தவரை 2 நாட்களுக்குள் முதலமைச்சருடன் பேசி முடிவு செய்யப்படும்.

மற்ற செய்திகள்
