சும்மா இருக்காமல் சீண்டிய நபர்… FLIGHT-ல டைசனிடம் வாங்கிய PUNCH … என்ன நடந்தது?
முகப்பு > செய்திகள் > உலகம்குத்துச் சண்டை முன்னாள் சாம்பியன் வீரர் மைக் டைசன் விமானத்தில் ஒரு நபரைத் தாக்கிய வீடியோ வைரல் ஆகி வருகிறது.

Knock out மைக் டைசன்…
அமெரிக்காவை சேர்ந்த மைக் டைசன் உலகப் புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரர் ஆவார். ஹெவிவெய்ட் போட்டிகளில் எதிராளிகளை நாக்-அவுட் செய்து வெற்றிபெறுவதே இவரது ஸ்பெஷலாகும். இதற்காகவே இவருக்கு உலகம் முழுவதிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரையில், மொத்தம் 58 போட்டிகளில் பங்கேற்று 50-இல் வெற்றி பெற்ற மைக் டைசன், 44 போட்டிகளில் நாக் அவுட் முறையில் எதிராளிகளை வீழ்த்தியிருக்கிறார்.
மைக் டைசனும் சர்ச்சைகளும்…
அதுபோலவே மைக் டைசன் பலமுறை பல சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார். ஒருமுறை சக போட்டியாளரின் காதைக் கடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போது மைக் டைசன் குத்துச் சண்டை போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். ஹேங்க் ஓவர் உள்ளிட்ட சில படங்களில் நடிகராக நடித்து வருகிறர். இந்நிலையில் இந்தியப் படம் ஒன்றில் அவர் இப்போது நடித்துள்ளார்.
லைகர் படத்தில் மைக் டைசன்…
விஜய் தேவரகொண்டா நடிப்பில் குத்துச் சண்டை போட்டிகளை மையமாகக் கொண்டு உருவாகும் லைகர் படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் அவர் நடித்துள்ளார். இது சம்மந்தமான சில படப்பிடிப்புத் தளப் புகைப்படங்களை படக்குழு இணையத்தில் பகிர அது வைரல் ஆனது. அவர் இந்த படத்தில் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
விமானத்தில் மைக் டைசனின் தாக்குதல்…
இந்நிலையில் தற்போது மைக் டைசன் விமானத்தில் ஒரு நபரை சரமாரியாகத் தாக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த நபர் தொடர்ந்து மைக் டைசனை சீண்டும் விதமாக நடந்துகொண்டதாக சொல்லப்படுகிறது. டைசன் அமைதியாக இருந்த போதும் அவர் தொண தொணவென்று அவரிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே இருந்ததாக சொல்லப்படுகிறது. அவரை அமைதியாக இருக்க மைக் டைசன் சொன்னதாகவும், ஆனால் அவர் விடாமல் தொந்தரவு செய்யவே மைக் டைசன் கோபமடைந்து அவரை முகத்தில் கடுமையாக தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது. இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
மற்றொரு சம்பவம்…
சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள பிரபல ஹாலிவுட் படப்பிடிப்பு தளத்தில் நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் மைக் டைசனும் கலந்துகொண்டார். அப்போது, அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த நபர் ஒருவர் மைக் டைசனை சண்டைக்கு வரும்படி அழைத்தார். இதனை அடுத்து, அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை அங்கிருந்து அகற்ற முயற்சித்தனர். ஆனால், அவர் விடாமல் கூச்சலிட்டிருக்கிறார். மேலும் துப்பாக்கியையும் எடுத்து மிரட்டும் விதமாக பேசினார். அப்போது மைக் டைசன் எந்த எதிர்வினையும் ஆற்றாமல் அமைதியாக இருந்தார்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

மற்ற செய்திகள்
