"இப்டி தான் அவுட் எடுத்தோம்.." கம்பெனி சீக்ரெட்'ட MI வீரர் கிட்டயே சொன்ன ஜடேஜா.. 'வைரல்' வீடியோ
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநடப்பு ஐபிஎல் தொடரில் கடைசியாக ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதி இருந்த போட்டியில், ராஜஸ்தான் அணி வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது.
இதற்கு முன்பு, 21.04.2022 அன்று நடைபெற்ற போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி பந்தில் மும்பை அணிக்கு எதிராக த்ரில் வெற்றி பெற்றிருந்தது.
அதுவும் குறிப்பாக, நீண்ட நாட்களுக்கு பிறகு, பினிஷிங் பணியில் இறங்கிய தோனிக்கு பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வந்தனர்.
கடைசி நான்கு பந்தில் 16 ரன்கள் தேவைப்பட, இரண்டு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் இலக்கை எட்ட உதவிய தோனி, சென்னை அணியின் இரண்டாவது வெற்றியையும் பதிவு செய்ய வைத்தார். வெற்றி வாய்ப்பை கடைசி பந்தில் தவற விட்ட மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் அனைவரும் அதிர்ந்து போயினர்.
ஆரம்பத்திலேயே அதிரடி
இந்நிலையில்; சூர்யகுமார் யாதவிடம் போட்டி முடிந்த பின்னர், ஜடேஜா பேசிய விஷயம் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. சென்னை அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ், முதல் ஓவரிலேயே ரோஹித் மற்றும் இஷான் கிஷான் ஆகிய முக்கிய விக்கெட்டுகளை இழந்து தவித்தது.
ஜடேஜா போட்ட திட்டம்
இதன் பிறகு களத்தில் வந்த சூர்யகுமார் யாதவ், வந்த வேகத்தில் அடுத்தடுத்து பவுண்டரிகளை விரட்ட ஆரம்பித்தார். இதனால், அவரை அவுட் எடுக்க சிறப்பாக ஃபீல்டிங் ஒன்றை ஜடேஜா செட் செய்தார். தொடர்ந்து, சாண்ட்னர் 8 ஆவது ஓவரை வீசவே, இதில் ஸ்வீப் ஷாட் ஒன்றை சூர்யகுமார் ஆடினார். இது நேராக, ஃபைன் லெக் திசையில் நின்ற முகேஷ் சவுத்ரியிடம் கேட்சாக மாறியது.
எப்படி பிளான் பண்ணேன் பாத்தியா?..
சூர்யகுமார் யாதவ் விக்கெட் குறித்து, போட்டி முடிவடைந்த பின்னர், அவரிடமே ஜாலியாக பேசினார் ரவீந்திர ஜடேஜா. முதலில் பேசிய சூர்யகுமார் யாதவ், "எனக்காக ஒரு ஃபீல்டரை சரியாக நிறுத்தி என்னை அவுட் செய்தீர்கள்" என ஜடேஜாவிடம் கூறினார். இதற்கு பதிலளித்த ஜடேஜா, "நிச்சயம் நீ அங்கே அடிப்பாய் என்று எனக்கு தெரியும். அதனால் தான் அங்கு ஒரு ஃபீல்டரை நிறுத்தினேன்" என சிரித்துக் கொண்டே பதிலளித்தார்.
இது தொடர்பான வீடியோவை மும்பை இந்தியன்ஸ் அணி தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் இணைப்பு….
https://www.behindwoods.com/bgm8/