அங்க நோ பால்-க்கு சண்ட போய்ட்டு இருக்கு.. இவரு என்ன தலையில தட்டி அனுப்பிட்டு இருக்காரு??.. சாஹல் - குல்தீப் நடுவே என்ன நடந்துச்சு??
முகப்பு > செய்திகள் > விளையாட்டுராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது, நோ பால் பெயரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டது, அதிகம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 223 ரன்கள் என்ற கடின இலக்கை டெல்லிக்கு நிர்ணயித்தது.
ராஜஸ்தான் வீரர் பட்லர் நடப்பு ஐபிஎல் சீசனில், மூன்றாவது சதமடித்து அசத்தி இருந்தார். பின்னர் கடின இலக்கை நோக்கி ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், அதிரடியாக ஆடி ரன் சேர்த்தது. இரண்டு ஓவர்களில், 36 ரன்கள் தேவைப்பட, 19 ஆவது ஓவரை பிரஷித் கிருஷ்ணா மெய்டனாக வீசினார்.
இதனால், கடைசி ஓவரில் டெல்லி அணி வெற்றி பெற 36 ரன்கள் வேண்டும் என்ற நிலை உருவானது. இக்கட்டான நிலையில், முதல் மூன்று பந்துகளையும் சிக்சருக்கு அனுப்பினார் போவல். இதனிடையே தான் நோ பால் பெயரில் சர்ச்சை உருவானது.
நடுவர் முடிவால் அதிருப்தி?
போவல் சிக்சருக்கு அடித்த மூன்றாவது பந்து, நோ பால் போல தோன்றியது. ஆனால், கள நடுவர்கள் நோ பால் கொடுக்கவில்லை. இதனால், வெளியே இருந்த டெல்லி அணியினர், ஒரு நிமிடம் கடுப்பாகினர். பார்ப்பதற்கு நோ பால் போன்றே இருந்ததால், அவர்கள் நடுவர்களிடம் முறையிட்டனர். தொடர்ந்து, பயிற்சியாளர் ஒருவரும் நேராக மைதானத்திற்குள் சென்று, நடுவரிடம் பேசிக் கொண்டிருந்தார்.
பண்ட் எடுத்த முடிவு
இன்னொரு பக்கம், டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் களத்தில் பேட்டிங் செய்து கொண்டிருந்த போவல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரை வெளியே வருமாறும் கோபத்தில் அழைத்தார். போட்டியை நிறுத்த வேண்டிய நோக்கில், பேட்ஸ்மேன்களை வெளியே அழைத்த பண்ட்டின் செயலும் கடும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. மேலும் வெளியே இருந்த டெல்லி அணியினர் நடுவரிடம் முறையிட்டு கொண்டிருக்க, உள்ளே இருந்த போவல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரும், நடுவரிடம் நோ பால் பற்றி ஆராயும் படி பேசிக் கொண்டிருந்தனர்.
'Kul-Cha' பண்ண சேட்டை
அவர்கள் மைதானத்தை விட்டு வெளியேறவும் முயன்றதாக கூறப்படுகிறது. நிலைமை இப்படி இருக்கையில், ராஜஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாஹல், குல்தீப்பிடம் போய் பேட்டிங் செய்யுமாறு ஜாலியாக கூறினார். உடனடியாக, குல்தீப் தலையை தட்டி, போய் பேட்டிங் செய் என்பது போன்றும் சைகை காட்டினார்.
சாஹல் மற்றும் குல்தீப் ஆகியோர் நெருங்கிய நண்பர்கள். இவர்களின் சூழல் காம்போவை குறிப்பிடும் வகையில், 'Kul-Cha' என்ற பெயரும் உள்ளது. இதனால், நோ பால் சர்ச்சைக்கு மத்தியில் இருவரும் ஜாலியாக நடந்து கொண்ட இந்த வீடியோ, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
@azharflicks meanwhile Kuldeep and Chahal 😂😂 pic.twitter.com/Fxb9CTTmAN
— Sehwag (@Sehwag54587220) April 22, 2022
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் இணைப்பு….
https://www.behindwoods.com/bgm8/

மற்ற செய்திகள்
