ரோட்டில் மூடாமல் கிடந்த கழிவுநீர் தொட்டி.. செல்போனில் பேசிக்கிட்டே தவறி விழுந்த பெண்.. அதிர்ச்சி வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாசெல்போன் பேசிக்கொண்டே சாலையில் திறந்து கிடந்த கழிவுநீர் தொட்டியில் பெண் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | ‘CSK வீரருக்கு முத்தம் கொடுத்த பொல்லார்டு’.. மேட்சுக்கு நடுவே நடந்த நெகிழ்ச்சி.. கொண்டாடும் ரசிகர்கள்..!
பீகார் மாநிலம் பாட்னாவில் சாலை ஒன்றில் பெண் ஒருவர் செல்போன் பேசிக்கொண்டே வந்துள்ளார். அப்போது அவருக்கு முன்னால் ஆட்டோ ஒன்று சென்றுள்ளது. அதற்குப் பின்னால் சென்ற அப்பெண் சாலையில் திறந்து கிடந்த கழிவுநீர் தொட்டியை கவனிக்கவில்லை.
இதனால் திறந்து கிடந்த கழிவுநீர் தொட்டியில் அப்பெண் தவறி விழுந்தார். இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து வேகமாக அப்பெண்ணை வெளியே தூக்கி மீட்டனர். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் வீடு திரும்பினார். செல்போன் பேசிக்கொண்டே எதிர்பாராதவிதமாக மூடாமல் கிடந்த கழிவுநீர் தொட்டியில் பெண் விழுந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அலட்சியமாக இதுபோல் சாலையில் கழிவு நீர் தொட்டியை மூடாமல் விட்டது குறித்து பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

மற்ற செய்திகள்
