இருக்குற ‘பிரச்சனையில’ இப்போ இது வேறயா.. எலெக்ஷன் முடிஞ்சது கூட தெரியாம டிரம்ப் ‘மகன்’ பார்த்த வேலை.. விட்டு ‘விளாசும்’ நெட்டிசன்கள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவடைந்து சுமார் ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில் டிரம்பின் மகன் பதிவிட்ட ட்விட் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 3ம் தேதி நடந்து முடிவடைந்தது. கொரோனா காரணமாக இதுவரை இல்லாத வகையில் முன்கூட்டியே சுமார் 10 கோடி மக்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்திருந்தனர். இதனை அடுத்து நடந்த வாக்கு எண்ணிக்கையில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் 290 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். குடியரசு கட்சியின் டொனால்ட் டிரம்ப் 214 வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியை சந்தித்தார். இந்த நிலையில் தேர்தல் தோல்வியை ஏற்க மறுத்துள்ள டிரம்ப், தபால் வாக்குப்பதிவில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளார்.
மேலும் பென்சில்வேனியா, விஸ்கான்சில், மிச்சிகன் உள்ளிட்ட மாநிலங்களில் தபால் வாக்குகள் தாமதமாக வந்ததாகவும், அதனால் அந்த வாக்குகளை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் குடியரசுக் கட்சியின் ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த சூழலில் அதிபர் டிரம்பின் மகன் எரிக் டிரம்ப் பதிவிட்ட ட்விட் ஒன்று தற்போது மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது. நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்ட எரிக் டிரம்ப், ‘மினெசோட்டா மக்களே அதிபர் தேர்தலில் வாக்களியுங்கள்’ என பதிவிட்டிருந்தார். தேர்தல் முடிந்து சுமார் ஒரு வாரம் ஆன நிலையில் மக்களை வாக்களிக்குமாறு பதிவிட்ட ட்வீட் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
But of course Eric Trump scheduled an Election Day tweet for the wrong week... pic.twitter.com/a4tL0UYRm8
— Rex Chapman🏇🏼 (@RexChapman) November 10, 2020
இந்த ட்விட் பதிவிடப்பட்ட சிறிது நேரத்திலேயே நீக்கப்பட்டாலும் அதனை க்ரீன்ஷாட் எடுத்து பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு டிரம்பின் மகன் எரிக் டிரம்பை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.