இணையத்தில் வைரலாகும் உலகின் மிக நீளமான மூக்குடைய நபர்.. யாரு சாமி இவரு?.. வெளியான சுவாரஸ்ய தகவல்..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | Nov 16, 2022 03:53 PM

இணையத்தில் உலகின் மிக நீளமான மூக்குடைய நபர் எனும் தலைப்பில் ஒருவருடைய புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

Man With Longest Nose Pic Goes Viral Here is the history

Also Read | ரங்கன் வாத்தியார் - கபிலனாக மாறிய தோனி, ஜடேஜா.. CSK அணி பகிர்ந்த மாஸான வீடியோ.. ஜடேஜா போட்ட தெறி கமெண்ட்..!

இணையத்தின் வளர்ச்சியினால் சமூக வலை தளங்கள் தற்போது கோலோச்சி வருகின்றன. சமூக வலை தளங்களை பொறுத்தவரையில் விநோதமான செய்திகளுக்கும் வீடியோக்களுக்கும் எப்போதுமே பஞ்சம் இருப்பதில்லை. இதுபோன்ற விஷயங்கள் உடனடியாக சோசியல் மீடியாவில் வைரலாகி விடுவதும் உண்டு. அந்தவகையில் தற்போது உலகின் மிக நீளமான மூக்குடைய நபர் என அழைக்கப்படும் ஒருவருடைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Man With Longest Nose Pic Goes Viral Here is the history

ட்விட்டரில் Historic Vids எனும் பக்கத்தில் தான் இந்த புகைப்படம் பகிரப்பட்டிருக்கிறது. தாமஸ் வெடர்ஸ் என்பவரின் மெழுகுச்சிலை Ripley's Believe It Or Not அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த சிலையின் புகைப்படம் தான் Historic Vids எனும் பக்கத்தில் கடந்த 12 ஆம் தேதி பகிரப்பட்டிருக்கிறது. அப்பதிவில்,"தாமஸ் வாட்ஹவுஸ் 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு ஆங்கில சர்க்கஸ் கலைஞர் ஆவார். 7.5 இன்ச் (19 செமீ) நீளம் கொண்ட உலகின் மிக நீளமான மூக்கைக் கொண்டவர்" என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இதனை கின்னஸ் நிர்வாக அமைப்பும் உறுதிப்படுத்தியுள்ளது. தாமஸ் பற்றி கின்னஸ் இணையதளத்திலும் குறிப்பு இருக்கிறது. அதில்,"1770 களில் இங்கிலாந்தில் வாழ்ந்த பயண ஃப்ரிக் சர்க்கஸ் (travelling freak circus) உறுப்பினரான தாமஸ் வெடர்ஸ், 19 செமீ (7.5 அங்குலம்) நீளமுள்ள மூக்கைக் கொண்டிருந்தார் என்று வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Man With Longest Nose Pic Goes Viral Here is the history

இந்நிலையில், தாமஸ் குறித்த Historic Vids-ன் இந்த பதிவு தற்போது படுவைரலாக பரவி வருகிறது. இதை 1.2 லட்சம் பேர் லைக் செய்திருக்கின்றனர். இருப்பினும் சமகாலத்தில் உலகின் மிக நீளமான மூக்கை கொண்டவர் (ஆன்) துருக்கி நாட்டை சேர்ந்த மெஹ்மெட் ஓசியூரெக் என்பவர் தான். இதனை கின்னஸ் நிர்வாகம் கடந்த ஆண்டு உறுதிப்படுத்தியிருந்தது. இவருடைய மூக்கின் நீளம் 3.46 அங்குலம் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | நேருக்கு நேர் மோதிய வாகனங்கள்.. கல்யாணமாகி ஒரே வாரத்துல மாப்பிள்ளைக்கு நேர்ந்த துயரம்.. பெரும் சோகத்தில் கிராம மக்கள்..!

Tags : #MAN #NOSE #LONGEST NOSE #MAN WITH LONGEST NOSE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Man With Longest Nose Pic Goes Viral Here is the history | World News.