ஸ்ட்ரிக்ட்டா இருந்த ஆசிரியர்.. 30 வருஷம் கழிச்சு மாணவன் எடுத்த ரிவெஞ்ச்.. பதறிப்போன போலீஸ் அதிகாரிகள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்30 வருடங்களுக்கு முன்னர் தன்னை அடித்த ஆசிரியரை மாணவர் ஒருவர் இப்போது கொலை செய்திருப்பது பெல்ஜியத்தையே அதிர வைத்து உள்ளது.

ரஷ்யா போட்ட குண்டு..இருந்த சுவடே தெரியாமல் போன தியேட்டர்.. வைரலாகும் புகைப்படங்கள்..!
1990 களில்
பெல்ஜியம் நாட்டை சேர்ந்தவர் குண்டெர் உவென்ட்ஸ். இவருடைய வயது 37. அங்குள்ள ஆரம்ப பள்ளி ஒன்றில் படிக்கும் போது மரியா வெர்லிண்டேன் என்ற ஆசிரியர் இவருக்கு பாடம் நடத்தி இருக்கிறார். மிகவும் கண்டிப்பான ஆசிரியரான மரியா பள்ளி காலத்தில் உவென்ட்ஸ்-ஐ அடித்திருக்கிறார். இதனால் கோபமடைந்த உவென்ட்ஸ் 30 வருடங்கள் கழித்து அதற்கு பழிவாங்கியிருக்கிறார்.
30 வருடங்களுக்கு பிறகு
பள்ளி, கல்லூரி என உவென்ட்ஸ்-ன் வாழ்க்கை சென்றிருக்கிறது. இதன் இடையே தன்னுடைய ஆசிரியர் மரியாவை தேடிவந்திருக்கிறார் உவென்ட்ஸ். ஆண்ட்வெர்ப் நகரில் வசித்துவந்த மரியாவை கண்டுபிடித்து கொலை செய்திருக்கிறார் உவென்ட்ஸ்.
இந்தக் கொலையை யார் செய்தது என்பது தெரியாததால் காவல்துறை அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்துவந்தனர். இதனிடையே தனது நண்பர் ஒருவரிடத்தில் இந்தக் கொலை குறித்து பேசியிருக்கிறார் உவென்ட்ஸ்.
கைது
உவென்ட்ஸ் கைது செய்யப்பட்டாலும் அவர் தான் கொலையை செய்தார் என்பதற்கான ஆதாரங்களை திரட்டத் துவங்கியது காவல்துறை. அதன்படி, அவரது டிஎன்ஏ மாதிரிகளை சேகரித்த போலீசார், கொலை நடைபெற்ற இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்களுடன் தொடர்பு படுத்தி ஆய்வு செய்தனர். இதன் அடிப்படையில் அவர் குற்றவாளி என நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆச்சர்யம் அளிக்கும் வகையில் உவென்ட்ஸ் தொடர்ந்து தேவாலயங்களுக்கு செல்லும் வழக்கம் கொண்டவர் என்றும் ஆதரவில்லாத மக்களுக்கு உணவு வழங்கி வந்ததாகவும் கூறுகின்றனர் அவரது அண்டை வீட்டார். இந்நிலையில், தன்னுடைய ஆசிரியர் ஒருவரை 30 வருடங்கள் கழித்து உவென்ட்ஸ் பழிவாங்கியது குறித்து பெல்ஜியம் நாட்டு மக்களே பரபரப்புடன் பேசிவருகின்றனர்.
"எனக்கு போர்புரிய-லாம் தெரியாது.. என்னால முடிஞ்சது இதுதான்".. இணையவாசிகளை உருக வைத்த இளம்பெண்..!

மற்ற செய்திகள்
