ரஷ்யா போட்ட குண்டு..இருந்த சுவடே தெரியாமல் போன தியேட்டர்.. வைரலாகும் புகைப்படங்கள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்உக்ரைன் நாட்டின் திரையரங்கம் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, அந்த திரையரங்கம் இருந்த சுவடே தெறியாமல் உருக்குலைந்த புகைப்படங்களை உக்ரைன் அரசு வெளியிட்டு உள்ளது.
Russia – Ukraine Crisis: வீட்டு மேல விழுந்த ரஷ்ய ராக்கெட்.. பிரபல நடிகைக்கு நேர்ந்த சோகம்..!
தாக்குதல்
உக்ரைன் நாட்டில் தரை, வான், பீரங்கி என அனைத்து வழிகளிலும் தாக்குதல் நடத்திவருகிறது ரஷ்ய ராணுவம். உக்ரைனின் கட்டுமான வசதிகளை நிர்மூலமாக்கும் நோக்கத்தோடு ரஷ்ய ராணுவம் செயல்பட்டு வருவதாக உக்ரைன் அரசு குற்றம் சாட்டிவருகிறது. உக்ரைனின் கார்கிவ், மரியு போல் மற்றும் தலைநகர் கீவ் -ல் ரஷ்ய ராணுவத்திற்கும் உக்ரைன் பாதுகாப்பு படைக்கும் உக்கிரமான போர் நடந்து வருகிறது.
தியேட்டர்
ரஷ்ய தாக்குதல் காரணமாக மோசமான பாதிப்பை சந்தித்து உள்ள மரியுபோல் நகரத்தில் உள்ள தியேட்டரில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், ரஷ்ய ராணுவம் குண்டு வீசி இந்த தியேட்டரை அழித்திருப்பதக உக்ரைன் அரசு தெரிவித்திருக்கிறது. இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள ரஷ்ய ராணுவம் மக்கள் குடியிருப்பு பகுதிகளின் மீது தாக்குதல் நடத்தவில்லை என தெரிவித்துள்ளது.
குழந்தைகள்
உக்ரைனின் மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதல் காரணமாக வீடுகளில் இருந்து வெளியேறிய நூற்றுக்கணக்கான உக்ரைன் மக்கள் இந்த தியேட்டரில் தஞ்சம் அடைந்திருந்ததாக உக்ரைன் அரசு கூறியுள்ளது. மேலும், கட்டிடத்தின் முன் மற்றும் பின் வாயில்களில் ஹெலிகாப்டரில் இருந்து பார்த்தாலும் தெரியும் விதத்தில் 'குழந்தைகள்' என எழுதப்பட்டு இருக்கும் புகைப்படத்தையும் அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது.
குண்டு வீச்சினால் முழுவதுமாக சேதமடைந்த தியேட்டரில் தங்கி இருந்தவர்களின் நிலை என்ன? என்பது குறித்து உலகமே கவலையுடன் கேள்வியெழுப்பி வருகிறது.
போர் குற்றம்
இது குறித்து உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா தனது டிவிட்டர் பக்கத்தில்," இன்னொரு பயங்கர போர் குற்றம் மரியுபோல் நகரத்தில் நடைபெற்றுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி போதுமக்கள் தங்கி இருந்த கட்டிடத்தின் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலை நடத்தி இருக்கிறது. போர் குற்றங்களை ரஷ்யா உடனடியாக நிறுத்த வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் வெளியுறவு அமைச்சர் குண்டு வீச்சுக்கு முன்னர் எடுக்கப்பட்ட தியேட்டரின் புகைப்படத்தையும் அதன் பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவி வருகிறது.