சுரங்கத்துல வாக் போனப்போ.. செங்கல் சூலை வியாபாரிக்கு கிடைத்த பொக்கிஷம்.. மனுஷன் இப்போ கோடீஸ்வரன்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஎதிர்பாராத நேரத்தில் நடக்கும் சில சம்பவங்கள் நம்முடைய வாழ்க்கையையே மாற்றிவிடும். அப்படி மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த வியாபாரிக்கு அடித்திருக்கிறது அதிர்ஷ்டம். செங்கல் சூலை வியாபாரியாக இருக்கும் இவர் இனி கோடீஸ்வரன். அப்படி என்ன கிடைத்தது அவருக்கு? 26.11 கேரட் வைரம்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: கன்னியாகுமரியில் வெற்றி பெற்ற மாற்றுத் திறனாளி வேட்பாளர்.. !
வைர சுரங்கம்
மத்திய பிரதேசத்தின் பன்னா மாவட்டத்தில் இருக்கிறது கிருஷ்ணா கல்யாண்பூர் பகுதி. இங்கேதான் சுஷீல் ஷுக்லாவிற்கு ஜாக்பாட் அடித்திருக்கிறது. செங்கல் சூலை வியாபாரம் செய்துவரும் சுஷீல் கடந்த திங்கட்கிழமை அன்று கல்யாண்பூர் பகுதியில் அமைந்துள்ள வைர சுரங்கத்திற்கு தனது நண்பர்களுடன் சென்றுள்ளார்.
அப்போது சுரங்கத்தின் உள்ளே எதோ மின்னுவது போல இருந்திருக்கிறது. அவர்கள் நினைத்தது போலவே அது வைர கல் தான். உற்சாகத்தில் கத்திய ஷுக்லாவின் குழு உடனடியாக சுரங்கத்தில் இருந்து வெளியே வந்து ஆரவாரமாக கூச்சலிட்டிருக்கின்றனர்.
கடந்த 20 வருடங்களாக வைரத்தை தேடிவந்த ஷுக்லாவின் குடும்பம் இறுதியாக வைரத்தை கண்டறிந்துள்ளது.
26.11 கேரட் வைரம்
ஷுக்லா கண்டுபிடித்த வைரம் 26.11 கேரட் இருப்பதாகவும் ஏலத்தில் இந்த வைரம் 1.20 கோடி வரையில் விலைபோகும் என்கிறார் வைர கல் நிபுணர் ரவி பட்டேல். இந்த வைரம் ஓரிரு நாட்களில் ஏலத்தில் விடப்படும் என்றும், அரசின் ராயல்டி மற்றும் வரிகள் கழித்த பிறகு, சுஷிலுக்கு கிடைக்கும் வருமானம் வழங்கப்படும் என்றும் ரவி கூறினார்.
பிளான்
தனக்கு கிடைத்த வைரம் குறித்து பேசிய சுஷில்," எங்களது குடும்பம் 20 வருடங்களாக வைர தேடலில் ஈடுபட்டு வருகிறது. எங்களுக்கு கிடைத்த கற்களில் இதுதான் மிகப்பெரியது. இந்த வைர கல்லை ஏலம் விடுவதன் மூலமாக கிடைக்கும் பணத்தை கொண்டு தொழில் துவங்க இருக்கிறேன்" என்றார்.
செங்கல் சூலை வியாபாரி ஒருவர் வைர கல் மூலம் ஓவர் நைட்டில் கோடீஸ்வரனாகி இருப்பது பலரையும் ஆச்சர்யப்படுத்தி இருக்கிறது.
40 ஆண்டுகளுக்கு பிறகு கோபிச்செட்டிபாளையத்தில் கால் பதித்த திமுக..!