"என் மனைவி பெண்ணே கிடையாது".. உச்ச நீதிமன்றத்தில் கணவர் கொடுத்த வித்தியாசமான விவாகரத்து மனு..!
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் தனது மனைவி பெண்ணே கிடையாது ஆகவே தனக்கு விவாகரத்து வழங்கிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் புகார் ஒன்றினை அளித்து இருக்கிறார்.
![Madhya Pradesh man files, cheating case against his wife Madhya Pradesh man files, cheating case against his wife](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/madhya-pradesh-man-files-cheating-case-against-his-wife.jpg)
பெரும் சோகம்! 5 இந்திய மாணவர்கள் மரணம்.. கனடா இந்திய தூதர் வெளியிட்ட செய்தி..! நடந்தது என்ன?
திருமணம்
மத்திய பிரதேசத்தை சேர்ந்த இந்த தம்பதிக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு ஜுலை மாதத்தில் திருமணம் நடைபெற்று இருக்கிறது. ஆரம்பத்தில் மாதவிடாய் காரணமாக தன்னுடைய பெற்றோர் வீட்டிற்கு சென்று இருக்கிறார் மனைவி. பின்னர் சிறிது காலம் கழித்து கணவருடன் சேர்ந்து வசிக்கத் துவங்கி உள்ளார் அந்தப் பெண். அப்போது, தனது மனைவியின் பாலினம் குறித்து கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
மருத்துவ பரிசோதனை
இதனை அடுத்து மனைவியை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார் கணவர். மருத்துவர்கள் நடத்திய பரிசோதனையில் அந்தப் பெண்ணிற்கு 'இம்பர்ஃபோரேட் ஹைமென்' ('Imperforate hymen) எனும் மருத்துவ பிரச்சினை இருப்பது தெரியவந்து இருக்கிறது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் எனவும் அவரால் எதிர்காலத்தில் கர்ப்பம் தரிக்க இயலாது எனவும் மருத்துவர்கள் கூறியதாகத் தெரிகிறது.
கோபம்
மனைவியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய கணவர், அவர் கர்ப்பம் தரிப்பது சாத்தியமற்றது என மருத்துவர்கள் கூறியதை அடுத்து மனைவியை அவரது பெற்றோர் வீட்டில் கொண்டுபோய் விட்டிருக்கிறார்.
மேலும், இப்படி ஒரு பிரச்சினை இருப்பதை மறைத்து தனக்கு திருமணம் செய்து வைத்துவிட்டதாக மனைவியின் தந்தை மீது குற்றம் சாட்டியிருக்கிறார் அந்தக் கணவர். மேலும், திட்டமிட்டு தந்தையும் மகளும் தன்னை ஏமாற்றிவிட்டதாக இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 420 இன் கீழ் வழக்கு தொடுத்திருக்கிறார். இந்த வழக்கை மத்திய பிரதேச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை அடுத்து, தனது மனைவி பெண் அல்ல என்றும் அவரிடமிருந்து விவாகரத்து பெற்றுத் தருமாறும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார் கணவர்.
விளக்கம்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் எம்.எம்.சுந்திரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு, கணவர் தொடர்ந்த மனுவிற்கு விளக்கம் அளிக்கும்படி மனைவிக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)