'உபாதை போன கேப்பில் ரூ.2.50 கோடி அபேஸ்'.. மதுரையையே மிரள வைத்த வழிப்பறி..கெத்து காட்டிய காவல்துறை..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரையில் 2.5 கோடி ரூபாயுடன் கடத்தப்பட்ட நகைக்கடை அதிபரை 9 மணி நேரத்தில் போலீசார் மீட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

பொருளை வித்தா கமிஷன்...வாட்சப்பில் வலை.. ஆசையாக முதலீடு செய்த வாலிபருக்கு வந்த சோதனை..!
நகைக்கடை அதிபர்
மதுரை அரசரடி பகுதியில் இயங்கிவரும் நந்தினி ஜூவல்லரியின் உரிமையாளர் தர்மராஜ். 61 வயதான இவர் தனது நகைக் கடைக்கு தேவையான தங்கத்தினால் ஆன பொருட்களை வாங்க நாகர்கோவிலுக்கு செல்வது வழக்கம். அப்படி, நேற்று நகைகள் வாங்க நாகர்கோவில் கிளம்பியுள்ளார் தர்மராஜ். இதற்காக 2.50 கோடி பணத்தினை எடுத்துச் சென்றிருக்கிறார். கூடவே விளாச்சேரியை சேர்ந்த பிரவீன் குமார் என்னும் டிரைவரை உடன் அழைத்துச் சென்றுள்ளார்.
கடத்தல்
பிரவீன் குமார் மற்றும் தர்மராஜ் ஆகிய இருவரும் பயணித்த போது, திருமங்கலம் பகுதியை அடுத்த நேசநேரி விளக்கு பகுதியில் காரை நிறுத்திவிட்டு சிறுநீர் கழிப்பதற்காக இறங்கியுள்ளனர். அப்போது எதிரே கத்தியுடன் வந்த இருவர் தர்மராஜை மிரட்டியுள்ளனர். பின்னர், தர்மராஜை காரில் ஏற்றி கடத்திச் சென்றிருக்கின்றனர்.
நகைக்கடை உரிமையாளர் தர்மராஜ் உடன் செல்லும் பயணம் குறித்து தனது நண்பர்களான அலெக்ஸ்சாண்டர் மற்றும் அருண்குமார் ஆகியோரிடத்தில் தெரிவித்திருக்கிறார் பிரவீன் குமார். அப்போது பணத்தை கொள்ளையடிக்க மூவரும் திட்டம் தீட்டியுள்ளனர். அவர்களது திட்டப்படி, நேசநேரி பகுதியில் பிரவீன் குமார் காரை நிறுத்த, மற்ற இருவரும் காருடன் சேர்த்து தர்மராஜை கடத்திச் சென்றுள்ளனர்.
தர்மராஜை கீழே இறக்கிவிட்டு, அங்கிருந்து பெரியகுளம் சென்ற அருண்குமார் மற்றும் அலெக்ஸ்பாண்டியன் அங்கிருந்து பேருந்து மூலமாக திண்டுக்கல் சென்று லாட்ஜில் ரூம் எடுத்து தங்கியிருக்கின்றனர். இதனை பிரவீன் குமார் முலமாக அறிந்த தனிப்படை காவல்துறை அதிகாரிகள், உடனடியாக செயல்பட்டு அருண்குமார் மற்றும் அலெக்ஸ்பாண்டியனை கைது செய்ததோடு அவரிடம் இருந்த பணத்தையும் கைப்பற்றியுள்ளனர்.
கொள்ளை கும்பலிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணம், செல்போன் மற்றும் நகைகள் ஆகியவை திருமங்கலம் காவல்நிலையத்தில் தனிப்படை காவல்துறை அதிகாரிகளால் ஒப்படைக்கப்பட்டது.

பாராட்டு
2.5 கோடி ரூபாயை வழிப்பறி செய்த கும்பலை துரிதமாக செயல்பட்டு கைது செய்த தனிப்படை அதிகாரிகளை மதுரை சரக காவல் துணை தலைவர் பொன்னி IPS, மற்றும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V. பாஸ்கரன் ஆகியோர் பாராட்டியுள்ளனர்.
பட்டப்பகலில் நகைக்கடை அதிபரை 2.5 கோடி பணத்துடன் கடத்திய கும்பலை 9 மணி நேரத்தில் காவல்துறை அதிகாரிகள் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
"இனி சாதிப் பெயரே வேணாம்".. பள்ளிகளுக்கு பறந்த எச்சரிக்கை ..அதிரடி காட்டிய அமைச்சர் அன்பில் மகேஷ்..!

மற்ற செய்திகள்