ஜாலியாக நீந்திக் கொண்டிருந்த நபர்.. கண் இமைக்கும் நேரத்துக்குள்ள.. கடற்கரையில நின்னவங்க அப்படியே உறைஞ்சு போய்ட்டாங்க

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | Feb 18, 2022 05:43 PM

ஆஸ்திரேலியா: ஷார்க் நைட் படத்தில் வருவதை போன்று ஆஸ்திரேலியாவின் கடற்கரை ஒன்றில் கடலில் நீந்திக்கொண்டிருந்த ஒருவரை சுறா மீன் ஒன்று கடித்துத் துண்டாக்கி கடலுக்கு அடியில் இழுத்துச் சென்ற பயங்கரமான சம்பவம் அனைவரையும் கதிகலங்க வைத்துள்ளது.

shark swallowed Sydney man who was swimming in the Sea

தன்னை காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸையே ஆட்டையைப்போட்ட நபர்.. கோவையில் பரபரப்பு.!

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நகரம் சிட்னி. அங்கிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் லிட்டில் பே என்ற கடற்கரை உள்ளது. பொதுவாக அந்த கடற்கரையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். பொதுமக்களும் விடுமுறை நாட்கள் அல்லாத ஏனைய நாட்களிலும் கடற்கரையில் நேற்று நீச்சல் அடித்துக் என்ஜோய் செய்வார்கள்.

இந்நிலையில் நேற்று லிட்டில் பே கடற்கரையில் நீச்சலடித்து கொண்டிருந்த ஒருவரை பெரிய சுறா மீன் ஒன்று தாக்கியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பார்ப்பவர்களை அதிர்ச்சியடைய  வைத்துள்ளது.

சிட்னி கடற்கரை:

இந்த சம்பவம் குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வந்த மீட்புக் குழுவினருக்கு, அவரது உடலில் சில பாகங்களும், ஆடையும்  மட்டுமே கிடைத்ததாக அறிவித்துள்ளனர். சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வரும் சிட்னி கடற்கரையில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

shark swallowed Sydney man who was swimming in the Sea

அதோடு தற்போது சிட்னி கடற்கரையில் நுழைய பொது மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சுறா மீன் தாக்குதல் நடத்திய இடத்தைச் சுற்றி அபாயப் பகுதி என்று எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் விசாரணை மற்றும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

9.8 அடி நீளமுள்ள வெள்ளை நிற சுறா:

மேலும், இந்த கொடூர சம்பவம் தொடர்பாக நியூசவுத் வேல்ஸ் முதன்மை தொழில்துறையின் செய்தித் தொடர்பாளர் கூறும் போது, 'இந்த சம்பவம் தொடர்பாக ஆய்வு செய்ததில், அந்த நபரை தாக்கியது 9.8 அடி நீளமுள்ள வெள்ளை நிற சுறாவாக இருக்கலாம் என சுறா உயிரியலாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 1963-ம் ஆண்டுக்கு பின் சிட்னியில் நடந்த முதல் அபாயகரமான சுறா தாக்குதல் இது தான். கோடைக் காலத்தில் மக்கள் கடற்கரைக்கு வருவதை தவிர்க்க வேண்டும். சுறா மீன் இருப்பது குறித்து அதிகாரிகள் ட்ரோன் மூலம் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்' எனத் தெரிவித்தார்.

அவரு கூட எப்படிங்க கம்பேர் பண்ணுவீங்க? எலான் மஸ்க் ஷேர் செய்த மீம்.. வெடித்த சர்ச்சையால் உடனே டெலீட்

Tags : #SHARK #SYDNEY #MAN #SHARK SWALLOW #SWIMMING IN THE SEA #ஆஸ்திரேலியா #ஷார்க் #சிட்னி கடற்கரை

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Shark swallowed Sydney man who was swimming in the Sea | World News.