"12 ஆயிரம் வருட மர்மம்!!.." திடீர் திடீர்ன்னு தோன்றி மறையும் பேய் கால் தடங்கள்??.. மிரள வைத்த ஆய்வு முடிவுகள்
முகப்பு > செய்திகள் > உலகம்சுமார் 12000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர் தொடர்பான தகவல் ஒன்று, தற்போது வெளி வந்துள்ளது.
Also Read | இன்ஸ்டா லைவில் சர்ப்ரைஸாக வந்த தோனி.. ரிஷப் பந்த் வைத்த 'Request'.. அடுத்த செகண்ட்டே நடந்த வைரல் 'சம்பவம்'..
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்து வந்த மனிதர்கள் மற்றும் அவர்களின் பழக்க வழக்கங்கள் தொடர்பாக, பல ஆராய்ச்சிகள் உலகெங்கிலும் உள்ள ஆய்வாளர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
அப்படி உலகெங்கும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும் போது, அவர்களின் ஆய்வுகள் முடிவில் தெரிய வரும் தகவல்கள், பலரையும் மிரண்டு போகச் செய்யும்.
அந்த வகையில், தற்போது அமெரிக்காவில் உள்ள உட்டா பாலைவனத்தில் கிடைத்த கால் தடங்கள் தொடர்பாக நடைபெற்ற ஆய்வு முடிவுகள், பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. உட்டாவின் 33 சதவீத இடங்கள் பாலைவனமாக தான் உள்ளது. அமெரிக்காவில் நவாடாவிற்கு பிறகு, இரண்டாவது வறண்ட மாநிலமாகவும் உட்டா உள்ளது.
ஆனால், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதி ஈரமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. அப்படி ஒரு சூழ்நிலையில், ஃபார் வெஸ்டர்ன் மானுடவியல் ஆராய்ச்சி குழுவை சேர்ந்த அர்பன் மற்றும் டேரன் டியூக் ஆகியோர், உட்டா பாலைவனத்தில் உள்ள அரிய தகவல் ஒன்றை கண்டறிந்துள்ளனர். ஆராய்ச்சிக்காக உட்டா பாலைவனத்தில் அவர்கள் பயணம் மேற்கொண்ட போது, பேயின் கால் தடங்கள் என அழைக்கப்படும் திடீரென தோன்றி மறையும் கால் தடங்களை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதற்கு காரணம், அப்பகுதியில் குறிப்பிட்ட ஈரப்பதம் இருந்தால், கண்ணுக்கு புலப்படும் அங்குள்ள கால் தடங்கள், சற்று வெப்பம் அதிகரிக்கும் போது கண்ணுக்கு தெரியாத வகையில் மாறும். இப்படி திடீர் திடீர் என தோன்றி மறையும் காரணத்தினால் இதனை பலரும் பேயின் கால் தடங்கள் எனக் கூறுகின்றனர். கால் தடங்கள் இருந்த குறிப்பிட்ட பகுதி, ஆய்வின் கீழ் கொண்டுவரப்பட்டு பல்வேறு தகவலும் சேகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த பனி யுகத்தின் முடிவில் இருந்த மனிதர்களின் கால் தடங்கள் என நம்பப்படும் நிலையில், சுமார் 12000 ஆண்டு வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களின் கால் தடம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் மொத்தம் 88 பேரின் கால் தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் ஐந்து முதல் 12 வயது வரை உள்ள சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் பலரின் கால் தடங்களும் இருந்துள்ளது. சுமார் 12000 ஆண்டுகளுக்கு முன்பாகவே குடும்பங்களாக வாழ்ந்ததற்கான ஆதாரத்தையும் இந்த கால் தடங்கள் தருவதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த கால் தடங்கள் கிடைத்த குறிப்பிட்ட இடமானது, மணல் மற்றும் ஈரம் சேர்ந்த சேற்று பகுதியாக அப்போது இருந்திருக்கும் என்றும், அந்த சமயத்தில் நடந்து சென்ற கால் தடங்கள், மணல் படிந்து படிமனாக மாறி அப்படியே இறுகி இருந்திருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
அது மட்டுமில்லாமல், கிட்டத்தட்ட 10,000 ஆண்டுகளாக ஈரப்பதம் பெற்ற பகுதியாக அந்த இடம் இருப்பதன் காரணத்தால் அந்த கால் தடங்கள் அப்படியே இருப்பதாகவும் கூறப்படுகிறது. பேய் கால் தடங்கள் என அழைக்கப்படும் இது தொடர்பான புகைப்படங்கள், தற்போது இணையத்தில் வைரலாகி பலரையும் ஆச்சரியத்துடன் பார்க்க வைத்துள்ளது.
Also Read | DJ, ஆட்டம், பாட்டம்ன்னு களை கட்டிய திருமண விழா.. திடீர்'ன்னு நடந்த அசம்பாவிதம்.. களேபரமான கல்யாண வீடு