"என் முதல் குழந்தை என் கையிலயே..."..எலான் மஸ்க்கின் சோக பக்கம்.. உருக்குலைய வைத்த ட்வீட்..

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | Nov 22, 2022 10:05 AM

உலக பணக்காரர்களில் டாப்பில் இருக்கும் எலான் மஸ்க் தனது முதல் குழந்தை பற்றி உருக்கமாக ட்வீட் செய்திருப்பது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Elon Musk recounts a painful memory about his first Child

Also Read | உ.பியில் மற்றுமொரு கொடூர காதலன்.. காதலிக்கு அரங்கேறிய சோக "சம்பவம்"

அமெரிக்காவில் வசித்துவரும் சேர்ந்த எலான் மஸ்க் 1971 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் பிறந்தார். இவர், விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார். போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலக பணக்காரர்களின் பட்டியலில் எலான் மஸ்க் டாப்பில் இருக்கிறார்.

Elon Musk recounts a painful memory about his first Child

முன்னதாக 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க மஸ்க் விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், போலி கணக்குகள் பற்றி தகவல்களை ட்விட்டர் நிறுவனம் வெளியிடவில்லை எனக்கூறி நிறுவனத்தை வாங்கும் முடிவை கைவிடுவதாக அறிவித்தார் மஸ்க். இதைத்தொடர்ந்து நீதிமன்றத்திற்கு செல்ல இருப்பதாக ட்விட்டர் நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்த சூழலில் ட்விட்டரை கைப்பற்றி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார் மஸ்க்.

பேச்சு சுதந்திரம் அனைவர்க்கும் தேவை என தொடர்ந்து கூறிவந்த மஸ்க், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ட்ரம்ப் உள்ளிட்டவர்களுக்கு ட்விட்டரில் விதிக்கப்பட்ட தடைகளை நீக்கினார். இந்நிலையில், நெட்டிசன் ஒருவர், அலெக்ஸ் ஜோன்ஸ் எனும் ரேடியோ நிகழ்ச்சி தொகுப்பாளருக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுமா என மஸ்க்கிடம் கேட்டிருந்தார்.

அமெரிக்காவின் Sandy Hook பகுதியில் உள்ள பள்ளியில் கடந்த 2012 ஆம் ஆண்டு துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் சுமார் 28 பேர் மரணமரணமடைந்தனர். இவற்றுள் பெரும்பாலானோர் மாணவர்கள். இந்த சம்பவம் அமெரிக்காவையே பெரும் அதிர்ச்சியில் ஆழத்தியது. இதனை ஜோன்ஸ் 'வதந்தி' என குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து அவரது ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது.

Elon Musk recounts a painful memory about his first Child

இந்நிலையில், அவருக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுமா? என நெட்டிசன் ஒருவர் மஸ்க்கிடம் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதில் அளித்திருக்கும் மஸ்க்," என்னுடைய முதல் குழந்தை என்னுடைய தோளில் இருக்கும்போதே மரணமடைந்தது. குழந்தையின் கடைசி இதயத்துடிப்பை நான் உணர்ந்தேன். குழந்தைகளின் மரணத்தை ஆதாயத்திற்காகவோ, அரசியலுக்காகவோ அல்லது புகழுக்காகவோ பயன்படுத்துபவர்கள் மீது எனக்கு இரக்கம் கிடையாது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.   இந்நிலையில், இந்த ட்வீட் நெட்டிசன்களிடையே அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

Also Read | Fifa WorldCup 2022 : கால்பந்து மேட்ச் பாக்க இப்படியா?.. 17 பேர் சேர்ந்து 23 லட்ச ரூபாயை திரட்டி.. உலகத்தையே திரும்பி பாக்க வெச்ச சேட்டன்கள்!!

Tags : #ELON MUSK #ELON MUSK ABOUT HIS FIRST CHILD

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Elon Musk recounts a painful memory about his first Child | World News.