'விமானத்தை கடத்த முயற்சி'...அதிரடி தாக்குதல் நடத்திய 'கமாண்டோ வீரர்கள்'...பரபரப்பு சம்பவம்!
முகப்பு > செய்திகள் > உலகம்By Jeno | Feb 25, 2019 11:30 AM
விமானத்தை கடத்த முயன்ற நபரை பாதுகாப்பு படையை சேர்ந்த கமாண்டோ வீரர்கள் சுட்டு கொன்ற சம்பம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பங்களாதேஷ் அரசுக்கு சொந்தமான விமான நிறுவனம் பிமான் ஏர்லைன்ஸ்.இந்த நிறுவனத்தின் விமானம் ஒன்று தலைநகர் டாக்காவிலிருந்து துபாய்க்கு 148 பயணிகளுடன் செல்ல தயாராக இருந்தது.வழக்கமாக டாக்காவிலிருந்து புறப்படும் அந்த விமானம்,அங்கிருந்து சிட்டக்காங் சென்று அங்குள்ள பயணிகளையும் ஏற்றிக்கொண்டு துபாய் செல்வது வழக்கம்.அந்த வகையில் நேற்று மாலை 4.35 மணிக்குப் புறப்பட அந்த விமானம் வானில் பறந்து கொண்டிருந்தது.அப்போது பயணி ஒருவரின் நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாக இருந்தது.
இதனால் அந்த விமானம் சிட்டகாங்கில் அவரசரமாகத் தரையிறக்கப்பட்டது. இதனை சற்றும் எதிர்பாராத அந்த நபர் 'நான் இந்த விமானத்தை கடத்த போவதாக' கூறி துப்பாக்கியை எடுத்து மிரட்டினார்.திடீரென விமானியின் அறைக்குள்ளும் செல்ல முயற்சித்தார்.இதனால் பயணிகள் பயத்தில் அலற தொடங்கினார்கள்.உடனடியாக இந்த தகவல் விமானக்கட்டுப்பாடு அறைக்கு தெரியப்படுத்தப்பட்டது.
இதனிடையே விமானநிலைய பாதுகாப்பு அதிகாரிகள் ராணுவத்தினருக்கு தகவல் தெரிவித்தார்கள்.உடனடியாக களத்தில் இறங்கிய ராணுவத்தின் சிறப்பு கமாண்டோ பிரிவு வீரர்கள் விமானத்தை சுற்றி வளைத்தார்கள்.உடனடியாக அவசர வழியாக பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய கொண்ட வீரர்கள்,அதிரடியாக விமானத்திற்குள் நுழைந்து,விமானத்தை கடத்த முயன்ற நபரை சுட்டு கொன்றார்கள்.அந்த நபரிடம் இருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்த கமாண்டோ வீரர்கள்,கொல்லப்பட்டவர் பங்களாதேஷை சேர்ந்த மஹதி என்றும்,அவர் பிரதமர் ஷேக் ஹசினாவுடன் பேச வேண்டும் என கூறியதாகவும் கமாண்டோ வீரர்கள் தெரிவித்தார்கள்.
இதனிடையே இந்த விவகாரம் குறித்து உயர்மட்ட விசாரணை மேற்கொள்ளபடும் என பங்களாதேஷ் அரசு அறிவித்துள்ளது.