'லாக்டவுனை மீறி கிரிக்கெட்'.. 'விரட்டிய' ட்ரோனை நோக்கி 'இளைஞர்' செய்த 'வைரல்' காரியம்!'.. வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Apr 24, 2020 06:58 PM

நாகை மாவட்டம் சீர்காழியில் ஊரடங்ககை மீறி மைதானத்தில் கிரிக்கெட் ஆடிய இளைஞர்கள் போலீஸார் அனுப்பிய ட்ரோன் மீது கற்களை விட்டு எறிந்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

youth throws stones over police drone during corona lockdown

நாடு முழுவதும் கொரோனாவை தடுக்கும் விதமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில்,  பலரும் கொரோனாவுக்கும் போலீஸாருக்கும் அஞ்சி வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். எனினும் வீட்டுக்கும் ஊருக்கும் அடங்காத சிலர் சீர்காழி அருகே, கொரோனா பற்றிய விழிப்புணர்வே இல்லாமல், மைதானத்துக்குச் சென்று கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர்.

அப்போது அவர்களை போலீஸார் ட்ரோன் கொண்டு விரட்டினர். அப்போது ட்ரோனை பார்த்ததும் பலர் பயந்து ஓடினர். அதில் ஒருவர் ட்ரோன் கேமராவை நோக்கி எல் எறிந்துள்ளார். ஆனால் அதிர்ஷ்டவசமாக கேமராவுக்கு எதுவும் ஆகவில்லை என்பதால், போலீஸார், கல்லெறிந்தவர்களை எச்சரித்து விட்டுள்ளனர்.