மற்றொரு 'வுகானாக' மாறிய 'சீன நகரம்'... 'மொத்தமாக முடக்கியது சீனா...' '28 நாள்' தீவிர கண்காணிப்பில் 'ஒரு கோடி பேர்...'

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Apr 24, 2020 06:58 PM

சீனாவில் திடீரென்று கொரோனா தொற்று அதிகமாக பரவியதைத் தொடர்ந்து அங்கு வுகான் போன்று இன்னொரு நகரம் மொத்தமாக முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

In china Another city, like Wuhan, is completely lockdown

சுமார் 1 கோடி மக்கள் வசிக்கும் சீனாவின் ஹார்பின் நகர் இப்போது  கொரோனா பரவலை எதிர்கொண்டு வருகிறது. இதனால் சீனா நிர்வாகம் இந்த நகரை முடக்கியுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து திரும்பிய 22 வயது மாணவன் ஒருவனால் சுமார் 70 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அது மட்டுமின்றி, அண்டை நாடான ரஷ்யாவில் இருந்து திரும்பிய மக்களால் ஹார்பின் நகரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதானல், குடிமக்கள் அல்லாத வேறு எவரையும் ஹார்பின் நகருக்குள் அனுமதிக்க அதிகாரிகள் மறுத்து வருகின்றனர். மேலும், வேறு நகரங்களில் பதிவான வாகனங்களும் ஹார்பின் நகருக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஹார்பின் நகருக்குள் திரும்பியவர்களையும், சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கி வருகின்றனர். அவர்களை 28 நாட்களுக்கு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அது மட்டுமின்றி மூன்று விதமான சோதனைகளும் மேற்கொள்ளப்பட உள்ளது.