"தோனி மட்டும் ஓய்வு பெறாமல் இருந்திருந்தா... இப்போ நடக்குறதே வேற"!.. தோனி கேப்டன்சி ஃபார்முலா!.. முன்னாள் பாகிஸ்தான் வீரர் விளக்கம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமுன்னாள் பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் யாசிர் அராபத், தோனியின் தலைமைத்துவ பண்புகள் குறித்து பகுப்பாய்வு செய்து வியக்கவைக்கும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
தோனி வீரர்களின் திறமையைத் துல்லியமாகக் கணித்து அவர்களிடமிருந்து சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டு வரும் ஒரு சிறந்த கேப்டனுக்கு உடைய கூறுகள் கொண்டவர் என்று யாசிர் அராபத் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், "தற்போதைய பாகிஸ்தான் அணி திறமையானது, ஆனால், தோனி போன்ற கேப்டன் தான் இவர்களுக்கு ஊக்கமளிக்க முடியும்.
எம்.எஸ். தோனி இப்போது விளையாடவில்லை. அவர் மட்டும் ஓய்வு பெறாமல் இருந்திருந்தால் நான் அவரை பாகிஸ்தான் அணிக்கு கேப்டனாகத் தேர்வு செய்திருப்பேன். இப்போதைய பாகிஸ்தான் அணிக்கு தோனி போன்ற ஒரு கேப்டன் தேவை. அவருக்கு மேன் மேனேஜ்மெண்ட் நன்றாகத் தெரியும். எங்கள் வீரர்கள் திறமைசாலிகள் தான் ஆனால், இவர்களுக்குத் தேவை தோனி போன்ற ஒரு திறமை படைத்த கேப்டன்.
ஷோயப் அக்தர் அடிக்கடி கூறுவதைக் கேட்டிருக்கலாம், அவர் தோனிக்குப் பவுலிங் செய்யும் போதெல்லாம் அவரை எப்படி பீட் செய்வது என்பது தனக்குத் தெரியாது என்று கூறுவார். தோனி உடல் ரீதியாக மன ரீதியாக வலுவானவர் என்பார் அக்தர். 90களில் தோனிக்கு முன்பாக மைக்கேல் பெவன் சிறந்த ஃபினிஷராக இருந்தார். அவரது ஒருநாள் போட்டி சராசரி 50க்கும் மேல். நடப்பு வீரர்களில் ஃபினிஷிங்கில் தோனிக்கு அருகில் கூட எந்த வீரரும் வர முடியாது" என்று யாசிர் அராபத் தெரிவித்துள்ளார்.