'பெரும் எதிர்பார்ப்புக்கு நடுவே'... 'கொரோனா தடுப்பூசி உற்பத்தியில்'.... 'சீரம் நிறுவனம் எடுத்துள்ள புதிய அதிரடி முடிவு!!!'...
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா தடுப்பூசியை 10 கோடி டோஸ்கள் கூடுதலாக உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியை விரைவில் சந்தைக்கு கொண்டுவரும் பணியில் இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளன. இவற்றில் இங்கிலாந்தின் பிரபல ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனத்துடன் இணைந்து கண்டறிந்துள்ள கொரோனா தடுப்பூசி தான் உலக அளவில் முதலில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக சந்தைக்கு வரும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே இந்த நிறுவனம் கண்டறிந்துள்ள தடுப்பூசியை கோவிஷீல்டு என்ற பெயரில் உற்பத்தி செய்ய புனேவில் உள்ள சீரம் இன்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் உரிமம் பெற்றுள்ளது. கொரோனா தடுப்பூசிக்கு முந்தைய பரிசோதனைகளை இந்நிறுவனம் தற்போது தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் கோவிஷீல்டு தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டுக்காக இந்தியாவில் சந்தைக்கு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது கூடுதலாக 10 கோடி டோஸ் தடுப்பூசியை உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளதாக சீரம் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இந்தியா, நடுத்தர மற்றும் ஏழை நாடுகளில் கொரோனா தடுப்பூசியின் தேவையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னதாக, இந்தியாவில் மொத்தம் 10 கோடி டோஸ்கள் கோவிஷீல்டு தடுப்பூசி உற்பத்தி செய்யப்படும் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் சீரம் நிறுவனம் தெரிவித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
