‘ஆன்லைன் கேம் போட்டியில்’... '16 வயது சிறுவனுக்கு அடித்த ‘மெகா’ ஜாக்பாட்'!
முகப்பு > செய்திகள் > உலகம்By Sangeetha | Jul 30, 2019 07:33 PM
அமெரிக்காவில் 16 வயது சிறுவன் ஒருவன், வீடியோ கேம் போட்டியில் 3 மில்லியன் டாலரை, இந்திய மதிப்பில் சுமார் 20 கோடி ரூபாய் ரொக்க பரிசை வென்றுள்ளான்.

அமெரிக்காவை சேர்ந்த ‘ஃபார்ட்நைட்’ என்ற ஆன்லைன் வீடியோ கேம் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் வீடியோ கேம் உலக கோப்பை போட்டியை நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
பெனிசில்வேனியா மாகாணத்தை சேர்ந்த 16 வயது சிறுவனான ஜியர்ஸ்டோர்ப் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடினான். போட்டியில் அனைத்து சுற்றுகளின் முடிவில் 59 புள்ளிகள் பெற்று அவர் முதலிடத்தை பிடித்தான். இதனையடுத்து அவருக்கு வெற்றிக்கோப்பையும், 3 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.20 கோடியே 66 லட்சம்) ரொக்க பரிசும் வழங்கப்பட்டது.
இந்தப் போட்டியில் 2-வது இடம் பிடித்த சீனாவை சேர்ந்த சங் என்ற சிறுவன் 1.8 மில்லியன் டாலரை (சுமார் ரூ.12 கோடி) பரிசாக பெற்றான். மேலும் இப்போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் 50 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.34 லட்சம்) வழங்கப்பட்டது. உலகளவில் அதிகமாக பணம் செலவிடப்பட்ட ஆன்லைன் கேமிங் போட்டி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
