'ஒன்னா ரெண்டா.. 20 வருஷம்டே' .. கொண்டாடும் கூகுளின் ஊழியர்.. இப்ப என்னவா இருக்கார் தெரியுமா?

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்

By Siva Sankar | May 31, 2019 10:41 AM

20 வருடங்களுக்கு மேலாக இயங்கிவரும் தேடுபொறியான கூகுளில் 20 வருடங்கள் பணிபுரிந்துள்ளதாக கூகுளின் யூடியூப் விங்கின் முதன்மை செயலாளர் சூசன் வாஜ்சிக்கி கொண்டாடப்பட்டு வருகிறார்.

Susan Wojcicki who Joined in May 1999 at Google Celebrating 20 yrs

அந்த காலத்தில் லைகோஸ், அல்டாவிஸ்டா, எக்ஸைட் போன்ற தேடுபொறிகளுடன் யாஹுவும் லீடிங்கில் இருந்த சமயம்தான் அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தின் இரு இளைஞர்களான லாரி பேஜ் மற்று செர்ஜி பெரின் இருவரும், ஒரு இணையபொறியை உருவாக்கத் திட்டமிட்டனர்.

இதில் லாரி பேஜ், தேடுபொறியில் அனைத்து வலைப்பக்கங்களும் கிடைப்பதற்கான பணியையும், செர்ஜி பெரின் அதற்கான அல்கோரிதங்களை உருவாக்கும் பணியிலும் ஈடுபட்டு பேக்ரப் என்கிற பெயரில் சிறிதாகத் தொடங்கிய தேடுபொறி தளத்தை ஆல்பாபெட் எனும் பேரண்ட்டல் நிறுவனத்துக்குக் கீழ் 1998-ஆம் ஆண்டுவாக்கில் கூகுளாக அறிமுகப்படுத்தினர்.

அதற்கு அடுத்த ஆண்டே, அதாவது 1999-ஆம் ஆண்டு கூகுளின் 16வது ஊழியராக இணைந்த சூசன் வாஜ்சிக்கிதான் தற்போது தனது 20-ஆம் ஆண்டை நிறைவு செய்திருக்கிறார். கூகுள் போன்ற தொழில்நுட்ப சித்தாந்த போட்டிகள் நிறைந்த ஒரு நிறுவனத்தில் 20 ஆண்டுகள் ஒரு பெண்ணாக தாக்குப் பிடித்த சூசன் வாஜ்சிக்கி 20 ஆண்டுகள் கூகுள் பணிபுரிந்ததற்காக கேக் வெட்டி கொண்டாடப்படும் போட்டோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இன்று அசுர வளர்ச்சியின் ஆபத்பாந்தவனாக, டிஜிட்டல் யுகத்தின் தீர்மானகாரியாக எழுந்து நிற்கும் கூகுளின் முதன்மை செயலாளராக தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #GOOGLE #SUSANWOJCICKI