'கொரோனா' பாதித்தவரின் 'எதிர்வீட்டில்' வசிக்கும் '6 மாத குழந்தை' உட்பட '4 பேருக்கு கொரோனா'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Apr 28, 2020 10:33 AM

நாமக்கல் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 மாத குழந்தை உட்பட்ட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Covid19: residents to the opposite home of Corona victim test positive

காளப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கடந்த 21ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவரது மனைவி மற்றும் மாமனாருக்கும் வைரஸ் பரவியது. இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், உறவினர்கள்,  அக்கம் பக்கத்தினர் என நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு சுகாதாரத்துறையினர் பரிசோதனை நடத்தியதில் அந்த இளைஞரின் எதிர் வீட்டில் வசிக்கும் 6 மாத குழந்தை உட்பட 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

அவர்கள் அனைவரும் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே அப்பகுதி முழுவதும் கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்ட நிலையில் சேர்ந்தமங்கலம் - ராசிபுரம் நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. சென்னையில் பணியாற்றிய அந்த இளைஞர் மூலம் அப்பகுதியில் கொரோனா பரவியுள்ள நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் காளப்பநாயக்கன்பட்டி கண்காணிக்கப்படும் பகுதியாக மாறியுள்ளது.