''சென்னையில் இந்த 6 ஏரியா பக்கம் போயிடாதிங்க...'' 'ஆபத்தான பகுதிகளாக அறிவிப்பு...' 'பெண்களை விட ஆண்களுக்கு அதிக பாதிப்பு...'
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் மிகத் தீவிரமாக கொரோனா பாதிக்கப்பட்டுள்ள 6 மண்டலங்கள் ஆபத்தானவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று உறுதி செய்யப்பட்ட 52 தொற்றுகளில் 47 தொற்று சென்னையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை மொத்தம் பாதித்துள்ள 570 நபர்களில், 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 173 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில், ராயபுரம், தண்டையார்பேட்டை, திருவிக நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய 6 மண்டலங்களில் கொரோனா தீவிரமாக பரவியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக ராயபுரத்தில் 158 பேரும், திரு.வி.க நகரில் 94 பேரும், தன்டையார்ப்பேட்டையில் 66 பேரும், தேனாம்பேட்டையில் 56 பேரும், கோடம்பாக்கத்தில் 54 பேரும், அண்ணாநகரில் 53 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், வளசரவாக்கத்தில் 17 பேரும், அடையாறில் 17 பேரும், திருவொற்றியூரில் 15 பேரும், அம்பத்தூரில் 15 நபரும், ஆலந்தூரில் 9 பேரும், பெருங்குடியில் 9 பேரும், மாதவரத்தில் 3 பேரும், சோழிங்கநல்லூரில் 2 பேரும், மணலியில் 1 நபரும் உள்ளனர்.
கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி வரை ஒரு தொற்று கூட இல்லாமல் இருந்த அம்பத்தூரில், நேற்று ஒரே நாளில் 13 தொற்று அதிகரித்து உள்ளது.
சென்னையில் ஆண்கள் 64.32% பேரும், பெண்கள் 35.68% பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். 20 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்களே அதிகம்பாதிக்கப்பட்டுள்ளனர். முதியவர்கள் மற்றும் , குழந்தைகள் குறைவாகவே பாதிக்கப்பட்டுள்ளனர்.