"எனக்கு மறு ஜென்மம் கொடுத்தவங்க.. அப்டிலாம் விட்ர மாட்டாங்க!".. 'இந்தியாவின்' முதல் 'பிஸாஸ்மா' டோனர் ஸ்மிருதி தாக்கர் 'உருக்கமான' வேண்டுகோள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்து சென்றுகொண்டிருக்கும் நிலையில், உலகநாடுகளும் கொரோனாவுக்கு எதிராக போராடி வருகின்றன.
பிளாஸ்மா தெரபி சிகிச்சை முறை தற்போது ஓரளவு கை கொடுப்பதாக பல நாடுகள் இதை முயற்சித்து வருகின்றன. இந்தியாவில் ஆபத்தான நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க மத்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் வழங்கியுள்ளது. பிளாஸ்மா என்பது குருதி அணுக்களை ஏந்திச்செல்லும் திரவம். கொரோனா நோய்த்தொற்றில் இருந்து குணமான நோயாளியின் உடலிலிருந்து பிளாஸ்மா எடுக்கப்பட்டு, கொரோனா நோயாளிகளுக்கு செலுத்தப்படுகிறது. அதாவது ரத்தத்திலிருந்து பிளாஸ்மாவை பிரித்தெடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு உடலில் செலுத்தும் முறை தான் இந்த பிளாஸ்மா சிகிச்சை முறை. இதுவும் ஒரு ரத்த தானம் போன்றதுதான் என்கின்றனர் மருத்துவர்கள். கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களின் உடலில் உருவாகும் எதிர்ப்பு புரதத்தை பயன்படுத்தி அளிக்கும் இந்த சிகிச்சை முறை, கொரோனாவுக்கு எதிராகப் போராடி, கொரோனா நோயாளிகளுக்கான எதிர்ப்பு சக்தியை வழங்கி அவர்களது உடலை அதற்கென தயார்படுத்துகிறது. இந்தியாவின் முதல் கோவிட்-90 பிளாஸ்மா நன்கொடையாளர் ஸ்மிருதி தாக்கர் இதுபற்றி தன் அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அகமதாபாத்தைச் சேர்ந்த ஸ்மிருதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, பூரண குணமடைந்து வீடு திரும்பிய பின்னரும் 14 நாட்கள் தனிமைப் படுத்தப்பட்டார்.
இதையடுத்து மருத்துவர்கள் அவரை தொடர்பு கொண்டு பிளாஸ்மா தெரபி பற்றி கூற, இதற்கு சம்மதம் தெரிவித்த ஸ்மிருதி தமது குடும்பத்தினருடன் ஆலோசனை செய்து பிளாஸ்மா தானம் வழங்கினார். இதுபற்றி பேசிய அவர், “கொரோனாவை எதிர்த்துப் போராடும் ஆண்டிபாடி எனது உடல் உற்பத்தியானது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி நான் என்னுடைய பிளாஸ்மாவை தானம் செய்தேன். மருத்துவர்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருந்தனர். பிளாஸ்மா தானம் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து எனக்கு அவர்கள் விளக்கினர். என்னுடைய ரத்தத்திலிருந்து பிளாஸ்மா எவ்வாறு பிரித்தெடுக்கப்படும்? நோயாளிகளின் உடலில் அவை எவ்வாறு செலுத்தப்படும் என்பதெல்லாம் குறித்து விரிவாக விளக்கினர். பிளாஸ்மா தானம் வழங்கிய பின்னர் இரண்டு மணி நேரம் இருக்கச் சொன்னார்கள். அதன்பின்னர் நான் வீடு திரும்பிவிட்டேன். இதுகுறித்து எனது குடும்பத்தினரிடம் நான் கேட்டபோது, ““நீ முதலில் சென்று பிளாஸ்மா தானம் செய்துவிட்டு வா”” என்பதுதான் அவர்கள் எனக்கு அளித்த முதல் பதிலாக இருந்தது. எனக்கு மறு ஜென்மம் அளித்த மருத்துவர்கள் என்னை ஆபத்திலிருந்து விடமாட்டார்கள் என எனக்கு தைரியம் அளித்தனர். இதையடுத்து உடனடியாக மருத்துவர்களிடம் சென்று பிளாஸ்மா தானம் அளித்தேன். இந்த இக்கட்டான நேரத்தில் கொரோனாவுக்கு எதிராக போராடுவதற்கு அதன் பாதிப்பில் இருந்து மக்களை மீட்பதற்கு பிளாஸ்மா தானத்தை விட பெரிய நன்கொடை எதுவுமில்லை. கொரோனாவில் இருந்து குணமடைந்த நோயாளிகள் அனைவரும் அதிகளவில் பிளாஸ்மா தானம் அளிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள்” என்று கூறினார்.