ஆண்டு தோறும் ஜூலை மாதம் நான்காம் தேதி அமெரிக்காவின் சுதந்திர தினமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நேற்று அமெரிக்கா தனது 244- வந்து சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபருக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
மோடி தனது வாழ்த்து பதிவில், 'அமெரிக்க அதிபர் டிரம்பிற்கும், அமெரிக்க மக்களுக்கும் 244-வது சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான, இந்த நேரத்தில் சுதந்திரத்தையும், மனிதத்தையும் இந்த நேரத்தில் கொண்டாடுகிறோம்' என பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்திய பிரதமர் மோடியின் வாழ்த்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நன்றி தெரிவித்துள்ளார். 'நன்றி எனது நண்பரே.. இந்தியாவை அமெரிக்கா எப்போதும் விரும்புகிறது' என தெரிவித்துள்ளார்.
Thank you my friend. America loves India! https://t.co/mlvJ51l8XJ
— Donald J. Trump (@realDonaldTrump) July 4, 2020