“கண் முன்னாலயே அப்பாவ சுட்டுட்டாங்க... 1 % தான் சார்ஜ் இருக்கு!” .. 30 மணி நேரம்.. காட்டுக்குள் சிக்கிய 15 வயது சிறுவன்.. திக்திக்.. நொடிகள்!
முகப்பு > செய்திகள் > உலகம்கலிபோர்னியா அருகே உள்ள டவுன்வில்லே பகுதிக்கு அருகில் உள்ளது தாஹூ தேசிய பூங்கா.
இந்த தேசிய பூங்காவிற்கு 45 வயதான அரி கெர்ஷ்மேன் என்கிற தந்தை தனது 15 வயது மகனான ஜாக் கெர்ஷ்மேனுடன் சாலை மார்க்கமாக ட்ரெக்கிங் சென்றுள்ளார். போகும் வழியில் இவர்களை சிலர் வழிமறித்து துப்பாக்கிக் காட்டி மிரட்டியதோடு, துப்பாக்கியால் அரியை சுட்டு விடுகின்றனர்.
துப்பாக்கிக் குண்டை வாங்கிக் கொண்டு உயிரை பறிகொடுத்துக் கொண்டிருந்த அரி, அந்த நிலைமையிலும், தன் மகன் ஜாக் கெர்ஷ்மேனை ஓடச் சொல்ல, அவனோ தந்தையை இந்த நிலையில் விட்டுவிட்டு ஓடவும் மனமில்லாம, உயிர் பயத்தோடு மூச்சுத்திணறத் திணற ஓடி துப்பாக்கிக் காரர்களுக்கு பயந்து 30 மணி நேரத்துக்கும் மேலாக பதுங்கி இருந்துள்ளான்.
அதே சமயம் சிறுவனின் போனில், 1 சதவீதம் மட்டுமே சார்ஜ் இருந்ததால், போலீஸாரின் அவசர கட்டுப்பாட்டு மையத்துக்கு ஒரு போன் கால் செய்துவிட்டு, தன் அம்மாவுக்கும் ஒரு தான் இக்கட்டான சூழலில் இருப்பதாகவும் தன்னிடம் சார்ஜ் இல்லை என்று மெசேஜ் பதிவிட்டுவிட்டும் பதுங்கி இருந்துள்ளார் ஜாக். அங்கு வந்த போலீஸார் சில மணி நேரங்கள் தேடி, சிறுவனைன் மொபைல் கடைசியாக இருந்த இடத்தை வைத்து டிராக் செய்து சிறுவனை மீட்டனர்.
மீட்கப்பட்டதும் சிறுவன், தன்னுடைய திக் திக் அனுபவங்களைக் கூறியதுடன், தண்ணீர் கேட்டுக் குடித்துள்ளான். இதனிடையே சிறுவனின் அப்பா இறப்பதற்கு சற்று நிமிடங்களுக்கு முன்னர்தான், தன் கணவர் அரிக்கு, சிறுவனின் அம்மா, தான் நோயில் இருந்து குணமாகிக் கொண்டு வருவதற்கான மருத்து பரிசோதனை முடிவுகளை மெசேஜில் அனுப்பி வைத்துள்ளார்.