அதிபர் தேர்தலில் 'அதிரடியாக' களமிறங்கும் பிரபல 'ராப் பாடகர்' - "வெள்ளை மாளிகையில் 'வெஸ்ட்'?" - அதிர்ச்சியில் 'டிரம்ப்'!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் நிலையில் இரண்டாவது முறையாக அதிபர் டிரம்ப் போட்டியிடுவது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் டிரம்பை எதிர்த்து போட்டியிடுகிறார்.

இந்நிலையில், பிரபல நடிகை கிம் கர்தர்ஷியனின் கணவரும் பிரபல ஹிப் ஹாப் பாடகருமான கென்யா வெஸ்ட் அமெரிக்க தேர்தலில் போட்டியிட போவதாக செய்தி வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான பதிவு ஒன்றை கென்யா வெஸ்ட் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தற்போதைய நிலையில் அமெரிக்காவை மீட்டெடுக்க வேண்டிய கடமை இருப்பதாகவும், இதனால் வரவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட தாம் திட்டமிட்டு இருப்பதாகவும் கென்யா வெஸ்ட் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, அமெரிக்காவில் கறுப்பின மக்களுக்கு எதிராக அதிக வன்முறை நடந்து வரும் நிலையில், தற்போதைய அதிபர் டிரம்ப் மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனால் அவரை எதிர்த்து ஒரு கறுப்பினத்தை சேர்ந்தவர் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக பரவலான கருத்து எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
We must now realize the promise of America by trusting God, unifying our vision and building our future. I am running for president of the United States 🇺🇸! #2020VISION
— ye (@kanyewest) July 5, 2020

மற்ற செய்திகள்
