இந்தியர்கள் மேல் 'இடியாக' இறங்கிய... டிரம்ப்பின் 'அடுத்த' அதிரடி அறிவிப்பு! - கலங்கி நிற்கும் இந்திய மாணவர்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆன்லைனில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கிடையாது என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

கொரோனா வைரசால் உலக அளவில் அமெரிக்காதான் அதிக பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. அமெரிக்காவில் தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியுள்ளது. தொடர்ந்து அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டுக்கொண்டே செல்லும் நிலையில், வகுப்புகள் ஆன்லைனில் மாற்றப்பட்டு உள்ள வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா வழங்கப்படாது என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஆன்லைன் மூலமாக கல்வி மாற்றப்பட்டு இருந்தால், வெளிநாட்டு மாணவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் அல்லது நேரடியாக வகுப்புகளில் பங்கேற்கும் கல்வி நிறுவனங்களுக்கு மாறிக்கொள்ளுதல் போன்ற மாற்று வழிகளை தேட வேண்டும் என்று அமெரிக்கா குடியேற்றத்துறை அறிவித்துள்ளது.
எனினும், பெரும்பாலான அமெரிக்க கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள், வரும் செமஸ்டர் என்ன மாதிரியாக செயல்படும் என்ற திட்டத்தை அறிவிக்கவில்லை. அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வார்டு பல்கலைக்கழகம் 40 சதவிதத்திற்கும் மேற்பட்ட யுஜி வகுப்புகள் ஆன்லைன் மூலமாக நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

மற்ற செய்திகள்
