'UNCLE, பாஸ்போர்ட்டை காட்டி அந்த பிஞ்சுங்க கேட்ட கேள்வி'... 'ஐயோ, அந்த பாவம் நம்மள சும்மா விடுமா?'... விமான நிலையத்தில் நடந்த கோர காட்சிகள்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Aug 27, 2021 09:42 AM

ஆப்கானிஸ்தானில் காபூல் விமான நிலையத்தை ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குவதற்கு முன்பு நடந்த சம்பவங்கள் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

British children plead for help at Kabul airport before ISIS attack

காபூல் விமான நிலையத்தைக் குறிவைத்து, ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு தற்கொலை வெடிகுண்டு தாக்குதலை நடத்தியுள்ளது. இதில், 60 பேர்கள் உடல் சிதறி பலியானதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

British children plead for help at Kabul airport before ISIS attack

இந்த தாக்குதலில் அமெரிக்க ராணுவத்தினர் 13 பேர்கள் கொல்லப்பட்டதாகவும், தாலிபான்கள் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், வெடிகுண்டு தாக்குதல் நடப்பதற்கு சில மணி நேரம் முன்னர், இங்கிலாந்து சிறுவர்கள் பாஸ்போர்ட் உடன்  உதவி கோரிய சம்பவம் வெளியாகியுள்ளது.

British children plead for help at Kabul airport before ISIS attack

இந்த நரகத்திலிருந்து வெளியேறி இங்கிலாந்திற்குச் செல்ல வேண்டும் என்பதே தற்போது எங்களின் நோக்கம் என அந்த இரண்டு குழந்தைகளின் தயார் சுல்தான் ஜாரி கூறியுள்ளார். தற்போது அந்த குழந்தைகள் குறித்து எந்த தகவலும் இல்லாத நிலையில், காபூல் நகரில் செயல்பட்டுவரும் ஐ.எஸ் அமைப்பினரால் தாக்குதல் முன்னெடுக்கப்படலாம் என அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தங்கள் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #ISIS ATTACK

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. British children plead for help at Kabul airport before ISIS attack | World News.