'அமெரிக்காவை தொடர்ந்து...' 'நிலாவில் தேசியக்கொடி நாட்டிய 2-வது நாடு...' வெற்றிகரமாக கொடியை நாட்டியது 'ரோவர்' இயந்திரம்...!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவை அடுத்து நிலாவில் தேசியக்கொடி நாட்டிய இரண்டாவது நாடு என்ற வரலாற்றை எழுதியுள்ளது சீனா.

சீனாவில் கடந்த மாதம் 24ம் தேதி சாங்க் இ-5 எனும் விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. இந்நிலையில் இந்த விண்கலம் நேற்று முன்தினம் நேற்று (டிசம்பர் 4) நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. விண்கலத்த்தில் இருந்த ரோவர் இயந்திரம் நிலாவில் இருக்கும் பாறைக்கற்கள், மண் உள்ளிட்ட மாதிரிகளை பூமிக்கு கொண்டு வந்து ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டது
தரையிறங்கிய ரோவர் இயந்திரம், நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக இயங்கத் தொடங்கி, சீன தேசிய கொடி நிலவின் மேற்பரப்பில் நாட்டியது. இதன் காரணமாக அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக நிலவில் தங்கள் தேசிய கொடியை நாட்டிய இரண்டாவது என்ற பெருமையை சீனா பெற்றுள்ளது.
மேலும் நிலவில் இருந்து மாதிரிகளை எடுத்து வந்த மூன்றாவது நாடு என்ற பெயரை சீனா பெறவிருக்கிறது. இதற்குமுன், அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகியவை நிலவின் மாதிரிகளை சேகரித்து எடுத்துவந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நிலவில் தங்கள் நாட்டின் கொடி நாட்டப்பட்ட புகைப்படத்துடன், ரோவர் இயந்திரம் மூலம் நிலவில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களையும் சீன விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

மற்ற செய்திகள்
