சென்னையை நனைத்த ‘திடீர்’ மழை.. இன்னும் எத்தனை நாளைக்கு இருக்கு..? வானிலை மையம் தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையின் பல இடங்களில் கடந்த 2 நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான வரை மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதில், வட கிழக்கு பருவக்காற்று காரணமாக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல் உள்மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு 7 சென்டி மீட்டர் மழையும், மாமல்லபுரத்தில் 6 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்
