‘210 நாடுகளில் கொரோனா பாதிப்பு’... ‘எவ்வளவு நோயாளிகள் மீண்டுள்ளனர்’... விபரங்கள் உள்ளே!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகம் முழுவதும் 210 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி உள்ள நிலையில், இந்த வைரசின் பாதிப்பில் இருந்து எவ்வளவு நோயாளிகள் மீண்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்திவருகிறது. தடுப்பு மருந்துகள் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனா வைரசின் தாக்கம் எப்போது தணியும் என்று கணிக்க முடியாத நிலை உள்ளது.
இன்றைய நிலவரப்படி உலகம் முழுவதும் 18 லட்சத்து 73 ஆயிரத்து 874 பேருக்கு வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 45 பேர் உயிரிழந்துள்ளனர். 4 லட்சத்து 35 ஆயிரத்து 185 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் 13 லட்சத்து 22 ஆயிரத்து 644 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 50 ஆயிரத்து 798 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா வைரசால் ஏற்பட்ட உயிரிழப்புகளில் அமெரிக்கா, இத்தாலியை விஞ்சி முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் 22,115 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இத்தாலியில் 19,899 பேர் உயிழந்துள்ளனர். ஸ்பெயினில் 17,209 பேரும், பிரான்சில் 14,393 பேரும், பிரிட்டனில் 10,612 பேரும், ஈரானில் 4,474 பேரும், சீனாவில் 3,341 பேரும் பலியாகி உள்ளனர்.
