'4.5 லட்சம் IT ஊழியர்களுக்கு'... 'இந்த கொரோனா நேரத்திலும்'... 'வெளியான ஹேப்பி நியூஸ்'... 'TCS நிறுவனத்தின் செம்ம அறிவிப்பு!!!'
முகப்பு > செய்திகள் > வணிகம்இந்தியாவின் மிகப் பெரிய ஐடி நிறுவனங்களில் ஒன்றான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் அசத்தல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

கொரோனா பாதிப்பால் பல நிறுவனங்களும் ஆட்குறைப்பு, சம்பளக் குறைப்பு ஆகியவற்றில் ஈடுபட்டு வருவதற்கு நடுவே, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம், அதன் 4.5 லட்சம் ஊழியர்களுக்கு இந்த அக்டோபர் 2020ல் சம்பள உயர்வு கொடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது. முன்னதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில், அந்நிறுவனம் ஊழியர்களில் சிலருக்கு பதவி உயர்வு கொடுத்தபோதும், சம்பள உயர்வை ஒத்தி வைத்து இருந்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும் இந்த சம்பள உயர்வுடன் மற்றும் ஒரு நல்ல செய்தியையும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் 2020 காலாண்டில் மட்டும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) சுமாராக 16,000 பேரை புதிதாக வேலைக்கு எடுத்துள்ளதாகவும், இந்த 16,000 பேரில் சுமாராக 7,200 கல்லூரி மாணவர்களை (Fresher) எடுத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் கடந்த ஜூலை 2020 - செப்டம்பர் 2020 வரையான 2020 - 21 நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம், 5.24 பில்லியன் டாலர் வருவாயை ஈட்டி இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இது கடந்த ஜூன் 2020 காலாண்டை விட 7.2 சதவிகிதம் அதிகமாகும். கடந்த 1 அக்டோபர் 2020 அன்று சுமாராக 2,500 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருந்த டிசிஎஸ் பங்கு இன்று உச்சமாக 2,885 ரூபாயைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இதனால் டிசிஎஸ் கடந்த 5 வர்த்தக நாட்களில் சுமாராக 15 சதவிகிதம் விலை ஏற்றம் கண்டு இருக்கிறது.

மற்ற செய்திகள்
