இன்னும் 2 நாள்ல.. '38,624 கிமீ வேகத்தில்'.. பூமியை நோக்கி வரும் ராட்சத விண்கல்.. அதிரவைக்கும் நாசா!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்பூமியை நோக்கி மணிக்கு 38,624 கிமீ வேகத்தில ராட்ச விண்கல் வந்து கொண்டிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சூரிய மண்டலத்தில் நடக்கும் பல ஆச்சரிய விஷயங்களை நாசா தனது ஆய்வுகளின் மூலம் வெளிக்கொண்டு வரும் சூழலில், அப்படி கிட்டத்தட்ட இரண்டு கால்பந்தாட்ட மைதானங்களை சேர்த்தது போன்ற அளவுடைய ஒரு சிறுகோள் பூமியை நோக்கி மணிக்கு 38,624 கிமீ வேகத்தில் வந்து கொண்டிருப்பதாகவும், எனினும் இந்த விண்கல்லால் பூமிக்கு எந்த பாதிப்பில்லை என்றும் தெரிவிக்கப்படுள்ளது.
இந்த விண்கல் 2020 கியூஎல் 2 நாசாவால் அபாயகரமானதாக கருதப்படுகிறது என்றாலும், இது பூமியைத் தாக்கும் வாய்ப்புகள் ஏதும் இல்லை என்றும், இது செப்டம்பர் 14ம் தேதியில் பூமியைக் கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படும் இதுபோன்ற சிறிய கோள்கள் ஒவ்வொரு மாதமும் பூமியைக் கடந்து சில நேரங்களில் மோதி, அழிந்துவிடும் என்றும் நாசா கூறியுள்ளது,
அத்துடன் பூமியின் சுற்றுவட்ட பாதையில் இவ்வாறாக கடந்து செல்லும் விண்கற்களால், அடுத்த 100 ஆண்டுகளில் எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்றும் நாசா குறிப்பிட்டுள்ளது.