‘உத்து பாத்தாதான் தெரியும்!’.. ‘சூரிய ஒளியில் புள்ளி போல் தெரியும் பூமி!’.. ‘30 வருஷத்துக்கு’ பின் நாசா ‘புதுப்பித்து’ வெளியிட்ட ‘வைரல்’ புகைப்படம்!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்

By Siva Sankar | Feb 16, 2020 07:27 AM

சுமார் 30 வருடங்களுக்கு முன்னர், அதாவது 1990-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆ தேதி பூமியில் இருந்து 4 பில்லியன் மைல் தொலைவில் எடுக்கப்பட்ட புகைப்படம் பேல் ப்ளூ டாட் என்கிற படம். 

Pale Blue Dot pic re released by NASA after 30 years

இதனை  Voyager 1 என்கிற விண்கலம் படமெடுத்ததன் மூலம், பூமியை இதற்கு முன்னர் பார்த்திராத ஒரு புதிய உலகத்தால் பார்க்க முடிந்தது. ஆம், அப்படத்தில் சூரிய வெளிச்சத்தில் பூமியானது ஒரு பிக்ஸசை விடவும் சிறிய அளவில் ஒரு புள்ளியாகத் தெரியும்.

இந்த புகைப்படத்தைத் தான், நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் புதுப்பித்து வெளியிட்டுள்ளது. பால்வழி அண்டத்தில் பூமி ஒரு மிகச்சிறிய அங்கம் என்பதை பறைசாற்றும் இந்த புகைப்படத்தை எடுத்த Voyager-1 விண்கலம் நெப்ட்யூன், யுரேனஸ், சனி, வியாழன், வெள்ளி உள்ளிட்ட கோள்களையும் படமாக்கியது.

இந்த தொகுப்பில் இடம் பெற்றுள்ள புகைப்படங்களில் திங்களானது சூரியனுக்கு வெகு அருகில் இருந்ததால் தெரியாமல் போனது.  ப்ளூட்டோ வெகு தொலைவில் சிறிய கரும்புள்ளியாகத் தெரிந்தது. செவ்வாய்க்கிரகம் சூரிய ஒளியால் மறைந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #NASA #EARTH