இதுவரை உலகம் சந்திக்காத அளவு பேரிடர் அந்த வருஷத்துல இருந்து நடக்கும்.. பகீர் கிளப்பிய ஐநா அறிக்கை.. முழு விபரம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | Apr 26, 2022 09:17 PM

2030 ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய இயற்கை பேரிடர்கள் ஏற்படலாம் என ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்திருப்பது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Humans could suffer 560 disasters every year by 2030 says UN

Also Read | 14,000 அடி உயரத்துல விமானத்தை மாத்தி சாகசம் செய்ய முயற்சித்த விமானிகள்.. உலகை உலுக்கிய சம்பவம்..!

சமகாலத்தில் உலகில் நிலவி வரும் காலநிலை மாற்றம், உணவு பற்றாக்குறை, நீர்நிலைகளின் அமைப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் வரும் 2030 ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் 560 மிகப்பெரிய இயற்கை பேரிடர்கள் ஏற்படலாம் என ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்துள்ளது. இதில் பெரும்பான்மையானவை காலநிலை தொடர்பானதாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஆண்டு காட்டுத்தீ, வெள்ளம் போன்றவை மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் எனவும் அது மட்டுமல்லாமல் நோய்கள் மற்றும் ரசாயன விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் ஐநா எச்சரித்துள்ளது.

Humans could suffer 560 disasters every year by 2030 says UN

காலநிலை மாற்றம்

இது குறித்து ஐக்கிய நாடுகள் அவை வெளியிட்டுள்ள அறிக்கையில் காலநிலை மாற்றம் அதிகரித்துவரும் விகிதம், காலநிலை மாற்றம் தொடர்பாக ஏற்படும் ஆபத்துகளின் எண்ணிக்கை இவற்றின் அடிப்படையில் 2030 ஆம் ஆண்டு காலநிலை மாற்றத்தால் இயற்கை பேரிடர்கள் அதிக அளவில் ஏற்படலாம் என கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1970 ஆம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை உலகில் 90 முதல் 100 வரையிலான மிதமான மற்றும் பெரிய அளவிலான பேரிடர்கள் நிகழ்ந்துள்ளன.

மேலும் 2001 ஆம் ஆண்டு வீசிய வெப்ப அலைகளை போல மூன்று மடங்கு 2030 ஆம் ஆண்டு வீசலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வழக்கத்தை விட 30 சதவீதம் கூடுதலான வறட்சி ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உணவுப் பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி ஆகியவற்றிற்கும் வழிவகுக்கலாம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Humans could suffer 560 disasters every year by 2030 says UN

நிதி நெருக்கடி

ஐநாவின் அபாயத் தடுப்பு குழுவின் தலைவர் மாமி மிசுடோரி இது குறித்து பேசுகையில் " தற்போது ஆபத்துக்கால நிதியில் 90% அவசரகால பயன்பாட்டிற்கு மட்டுமே செலவிடப்படுகிறது. 6% மறுகட்டுமானத்திற்கும், தடுப்பு பணிகளுக்கு 4 சதவீதம் மட்டுமே நிதி செலவிடப்படுகிறது" என குறிப்பிட்டார்.

1990 களில் உலகம் முழுவதும் ஏற்பட்ட பேரிடர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் செலவழிக்கப்பட்ட தொகை 70 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். இப்போது ஒரு வருடத்திற்கு 170 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இந்த செலவினம் உயர்ந்துள்ளது. இது உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை நிதி நெருக்கடியில் தள்ளலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

வளரும் நாடுகளுக்கு மிகுந்த ஆபத்து

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் நிதி தொடர்பான நெருக்கடிகளில் வளர்ந்த நாடுகளைவிட வளரும் நாடுகள் அதிக அளவு நெருக்கடியை சந்திக்கலாம் என ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி வளரும் நாடுகள் ஒரு சதவீதம் அளவிற்கு தங்களுடைய ஜிடிபியில் சரிவை சந்திக்கலாம் எனவும் வளர்ந்த நாடுகள் 0.1 முதல் 0.3 சதவீதம் வரையில் தங்களது ஜிடிபியில் இழப்பை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Humans could suffer 560 disasters every year by 2030 says UN

2030 ஆம் ஆண்டு உலகம் முதல் முழுவதும் வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய இயற்கை பேரிடர்கள் ஏற்படலாம் என எச்சரித்திருப்பது தற்போது உலகம் முழுவதும் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

Tags : #HUMANS #UN #CATASTROPHIC DISASTERS #ஐநா அறிக்கை #இயற்கை பேரிடர்கள்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Humans could suffer 560 disasters every year by 2030 says UN | World News.